தமிழக அரசு கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் – அரசு அனுமதி!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் – அரசு அனுமதி!

தமிழக அரசு கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் – அரசு அனுமதி!


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கணிசமாக குறைந்திருக்கும் நிலையில் பள்ளி
, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கு 2,423 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலைமையை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டது. இந்நிலையில் அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4 முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வி இயக்குனர் கடிதம் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரி கல்வி இயக்குநர் 

கடிதத்தில், கருத்துருவை அரசு கவனமாக பரிசீலனை செய்து தற்போது உள்ள நிதி நெருக்கடி 

சூழலில், கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதிக்க இயலாத நிலையில் 

2021-22ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் 

கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் 

செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை தற்காலிகமாக சுழற்சி 1-ல் 

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2,423 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த அனுமதி 

வழங்கப்படுகிறது. அதற்கான செலவினமாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20 

ஆயிரம் வீதம் 5 மாதங்களுக்கு ரூ.24 கோடியே 23 லட்சம் ஒப்பளிப்பு செய்து அரசு 

ஆணையிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Response to "தமிழக அரசு கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் – அரசு அனுமதி!"

  1. இது இப்படி நியமனம் செய்யபடுவாங்க...

    ReplyDelete

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel