தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை முக்கிய அறிவிப்பு – 25% வரை கல்வி கட்டணம் விலக்கு!

Trending

Breaking News
Loading...

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை முக்கிய அறிவிப்பு – 25% வரை கல்வி கட்டணம் விலக்கு!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை முக்கிய அறிவிப்பு – 25% வரை கல்வி கட்டணம் விலக்கு!


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு
25 சதவீதம் வரை கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கட்டணத்தில் விலக்கு:

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் கல்லூரி சென்று படிக்க முடியாத மாணவர்கள் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட 21 படிப்புகள் உட்பட 130 இளநிலை, முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் தொலைநிலை வழியில் கற்றுத் தரப்படுகிறது.

தொலைநிலைக் கல்வியின் மேம்பாட்டுக்கு, உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட புதிய படிப்புகளை தொடங்க திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தற்போதைய சூழலில், வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில்சார் படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

அதன்படி, இயங்குபடம் மற்றும் காட்சிப் படத்தோற்றம் (Animation & Graphics), சில்லறை விற்பனை மேலாண்மை (Retail Management), வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Technology), ஊடகம் மற்றும் கேளிக்கை (Media & Entertainment) ஆகிய 4 இளநிலை தொழிற்சார் பட்டப் படிப்புகள் (பி.வோக்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தவிர, சமூக நீதி உட்பட பல்வேறு பிரிவுகளில் 15 சான்றிதழ்கள் மற்றும் குறுகிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலையுடன் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பாடப்பிரிவும் ஒன்றாகும். இதற்கான அனைத்து முன் தயாரிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டன. நடப்பு கல்வியாண்டு முதலே இந்த படிப்புகளை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே பல்கலையில் குறைந்த கல்விக் கட்டணத்தில் தான் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. எனினும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்கருதி, இந்த ஆண்டு முதல் கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்வழிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 25 சதவீதம் வரை கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். இதர படிப்புகளில் சேரும் ஏழை, எளிய மாணவர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை சலுகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

மேலும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய, பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் கடந்த ஆண்டு 2,473 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழக அரசின் அனுமதி பெற்று, இந்த ஆண்டும் மண்டலம் வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

0 Response to "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை முக்கிய அறிவிப்பு – 25% வரை கல்வி கட்டணம் விலக்கு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel