
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா (SBI), தனது யோனா சேவையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வருமான வரி
சேவையை அளிப்பதாக தற்போது அறிவித்துள்ளது.
வருமான வரி சேவை
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது
வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது SBI வங்கி சமீபத்தில் தனது வாடிக்கையாளர்கள் வருமான வரி வருமானத்தை (ITR) Tax2Win உடன் YONO செயலியில் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தனது
அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீங்கள் ITR தாக்கல் செய்ய வேண்டுமா? அதை இனி SBI யோனோவில் டாக்ஸ் 2 வின் மூலம் இலவசமாக செய்யலாம்.
உங்களுக்கு தேவையானது 5 ஆவணங்கள் மட்டுமே.
இப்போதே sbiyono.sbi பக்கத்தில் பதிவிறக்கம் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. இதனுடன் SBI வாடிக்கையாளர்கள்
ரூ.199 க்கு eCA உதவியைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும். இப்போது sbi வங்கியின்
வாடிக்கையாளர்கள் ITR தாக்கல் செய்யும் போது சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
முதலில், PAN கார்டு.
ஆதார் கார்டு.
படிவம் -16
வரி விலக்கு விவரங்கள்
வட்டி வருமான சான்றிதழ்கள்
வரி சேமிப்புக்கான முதலீட்டு சான்றுகள் ஆகியவை தேவைப்படும்.
இப்போது யோனோ செயலி மூலம் ITR தாக்கல் செய்ய:
SBI YONO செயலியில் உள்நுழையவும்.
‘Shops and Orders’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
பின்னர் ‘Tax
and Investment’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
பிறகு ‘Tax2Win’
ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
இதனை நிறைவேற்றிய பிறகு பயனர்கள் ITR தாக்கல் செய்யும்
வழக்கமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
0 Response to "SBI YONO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இலவச வருமான வரிக்கணக்கு தாக்கல்!"
Post a Comment