
மருத்துவ மேற்படிப்பில் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
இட ஒதுக்கீடு:
12ம் வகுப்பு முடித்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ
படிப்பிற்கான சீட்கள் வழங்கப்பட நிலையில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்
தமிழகத்தில் இன்னும் நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை
நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 2016-17 கல்வியாண்டு வரை மாநில
அரசுக்கான கோட்டாவில் உள்ள இடங்களுக்கு மாநில அரசு தனியாக தேர்வு நடத்தி மாணவர்
சேர்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை கொண்டிருந்தது.
அதில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
வழங்கப்பட்டது. நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசின் கீழ் இருக்கும் 50 சதவீத இடங்களுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
நடைபெற்றது. அரசு மருத்துவ சங்கங்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள்
வைத்து வந்தனர். அதனை தொடர்ந்து 2020ல் அரசாணை 463 வெளியிடப்பட்டது. அந்த அரசாணை வெளியான பிறகு மருத்துவ
மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to " தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு – அறிவிப்பு வெளியீடு!"
Post a Comment