
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள்
குறித்த அறிவிப்பு கடந்த ஒரு சில நாட்களாக வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்று (அக்.7)
தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல்
ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை
படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வைத்து ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
அதே போல இலக்கியம், இயற்பியல் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின்
தலைவர் ஸ்டாக்ஹோமில் வைத்து வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பெறும் நபர்களின்
பட்டியல் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்றும்
(அக்டோபர் 7) நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதன்
படி, இந்த ஆண்டுக்கான, இலக்கியத்துறைக்கான நோபல்
பரிசை தான்சானியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா பெறுவதாக
தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இந்த நோபல் பரிசு, காலனித்துவத்தின் விளைவுகள் மற்றும் கலாச்சாரங்கள், கண்டங்களுக்கிடையேயான வளைகுடாவில் அகதிகளின் தலைவிதியின் சமரசமற்ற மற்றும் இரக்கமற்ற ஊடுருவலை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக வழங்கப்படுகிறது. தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கிட்டத்தட்ட 21 வயதில் இருந்து தனது கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் நாவலாக பதிவிட்டு வரும் இவருக்கு தற்போது இலக்கியத்துறைக்கான நோபல் பரிசுடன் ரூ.8 கோடி ரொக்கப்பரிசும் வழங்கப்பட இருக்கிறது.
0 Response to "இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறும் எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!"
Post a Comment