மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Trending

Breaking News
Loading...

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!


தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் முதல் முதுகலை பயிலும் மாணவர்கள் வரை அனைத்து சிறுபான்மையின மாணவர்களுக்கும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

கல்வி உதவித்தொகை:

நாட்டின் முன்னேற்றம் மாணவர்களின் கையில் உள்ளது என்பதை உணர்ந்த நம் நாட்டின் மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வி பயிலும் மாணவர்களை பல்வேறு வகையான உதவி திட்டங்களையும் வழங்கி வருகிறது. மேலும், மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு தடையாக இருக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து அவற்றை களைந்து வருகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் தங்கள் கல்வியை இழந்து விடக் கூடாது என்பதற்காக பல திட்டங்களின் வாயிலாக கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது.

தற்போது சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவும் வகையில் உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2021-22 கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு (இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைனர்) மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதில், 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இந்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு தகுதியான பள்ளி மாணவர்கள் நவம்பர் 15ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 30ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க எதுவாக அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவ/மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முகவரியில் உள்ள அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,
எண்.32, சிங்கார வேலர் மாளிகை, இரண்டாவது தளம்,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

0 Response to "மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel