
தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கலந்தாய்வு
முடிந்துள்ள நிலையில் அக்.,27ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம்
அறிவுறுத்தியுள்ளது. கூடுதல் விவரங்கள் குறித்து மாணவர்கள் அண்ணா பல்கலையின்
அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும்
கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன்
வகுப்புகள் நடத்தப்பட்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.முந்தைய தேர்வில்
மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பொது தேர்வில் மதிப்பெண்கள்
வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்கள் விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து
கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர்.
அதே சமயம் பலர் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வில்
கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவ்வாறு கல்லூரிகளை தேர்வு செய்த
மாணவர்கள் அக்.,27ம் தேதிக்குள் சேர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வாறு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் எம்ஐடி கல்லூரியை தோ்வு செய்த மாணவா்கள் அக்.25 முதல் 27-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். தங்களுக்கான சேர்க்கை விவரம், வழிமுறைகள், கல்விக்கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை பல்கலை. இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவா்களுக்கான முன் தயாரிப்பு பயிற்சி வகுப்புகள் அக்.29-ஆம் தேதி தொடங்கும் என கோரப்பட்டுள்ளது.
0 Response to "அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.27 கடைசி நாள்!"
Post a Comment