
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அசல் சான்றிதழில் திருத்தங்கள்
இருந்தால் உரிய ஆவணங்களை அனுப்புமாறு அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. இது
குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சான்றிதழில் திருத்தம்
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் படங்கள்
நடத்தப்பட்டு வந்தது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு
பொதுத்தேர்வு நடத்தும் சூழல் இல்லாத காரணத்தால் அனைவருக்கும் ஆல் பாஸ் என
அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில்
மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் வழங்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வழங்கப்பட சான்றிதழில் திருத்தங்கள் இருக்கும்
பட்சத்தில் உரிய ஆவணங்களை அனுப்புமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது
குறித்து அரசு தேர்வு துறை இணை இயக்குனர் செல்வகுமார் சுற்றறிக்கை ஒன்றை
அனுப்பியுள்ளார். அதில் கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில் பிழை
திருத்தங்கள் இருந்தால், அது குறித்து,
மாணவர்களிடம் உரிய ஆதாரங்களை பெற வேண்டும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட தற்காலிக சான்றிதழில் பதிவுகள் சரியாக இருந்தால், அந்த நகலுடன், அசல் சான்றிதழ் நகலையும் இணைத்து அனுப்ப வேண்டும்.தேர்வரின் பிறந்த தேதி, இனிஷியல், தமிழ், ஆங்கில மொழிகளில் பெயர் திருத்தங்கள் போன்றவற்றில் மாற்றம் இருந்தால், மாற்று சான்றிதழின் தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட்ட நகலை இணைத்து அனுப்ப வேண்டும். தந்தை அல்லது தாயின் பெயரில் திருத்தங்கள் இருந்தால், தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட ஆளறி சான்றிதழ் என்ற, ‘போனபைடு’ சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "தமிழகத்தில் 10ம் வகுப்பு அசல் சான்றிதழ் பெற்றுக் கொண்ட மாணவர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுத்துறை!"
Post a Comment