
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு பிஎட் படித்த பிறகு
கூடுதலாக முதுநிலை படித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் தேர்வுக்கு
விண்ணப்பித்தோர் பரிதவிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனால் தேர்வர்கள் புதிய
சிக்கல் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு :
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அரசு
மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலியாக 2,207 முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்கள் பணியிடத்திற்கு போட்டித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்
திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வில் 40 வயதை கடந்த பட்டதாரி
ஆசிரியர்கள் பங்கு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பலரும் எதிர்த்து
வருகின்றனர்.
இந்த தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு
வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 17ம் தேதி தான்
கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதுநிலை ஆசிரியர்
தேர்வுக்கு பிஎட் படித்த பிறகு கூடுதலாக முதுநிலை படித்தவர்களின் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. முதுநிலை பட்டப்படிப்பு முடித்த
திருச்சியை சேர்ந்த யுவராஜ் என்பவர் இணையத்தில் ஒருவாரமாக தேர்வுக்கு விண்ணப்பிக்க
முயற்சித்து வருகிறேன் முடியவில்லை. இதுபோல பலரும் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து
வருகின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்வு வாரியத்தில் புகார் அளித்த போது விண்ணப்பிக்கும்
இணையதளத்தில் கோளாறு என்றும் அவை விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால் இப்போது வரை சரி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த குளறுபடி
பலரின் வேலைவாய்ப்பை பாதிக்கும் அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் போர்க்கால
அடிப்படையில் விவரித்து இப்பிரச்னையை சரி செய்ய வேண்டும். மேலும் முதுநிலை
ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற தலைவர் அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளார்.
0 Response to "TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – தேர்வர்களுக்கு புதிய சிக்கல்!"
Post a Comment