
நாடு முழுவதும்
இதுவரை 70%
பேர் கொரோனாவிற்கு
எதிரான முதல் டோஸ் தடுப்பூசியும், 25% பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும்
செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
அறிவித்துள்ளார்.
கொரோனா
தடுப்பூசி:
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அதன்படி, முதலில், முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கும், அடுத்தகட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டது. முதலில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு பயந்தனர். பின்னர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.
இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள்
தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மேற்கொண்டுள்ளது. இதனால் நோய்
தொற்று பாதிப்பு விகிதமும் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. நாட்டின் தினசரி
பாதிப்பு 20,000
என்ற நிலையை
அடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா தடுப்பூசி
செலுத்திக் கொண்டவர்களின் விவரங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசியை இதுவரை 70% இளைஞர்களும், 25% மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி தலைமையில், கொரோனாவிற்கு எதிரான போரில் புதிய இலக்கை எட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 90 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Response to "நாட்டில் 70% பேருக்கு முதல் டோஸ், 25% பேருக்கு 2ம் டோஸ் தடுப்பூசி – மத்திய சுகாதாரத் துறை தகவல்!"
Post a Comment