தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள், பழைய ஓய்வூதியம் – ஊழியர்கள் வலியுறுத்தல்!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள், பழைய ஓய்வூதியம் – ஊழியர்கள் வலியுறுத்தல்!

தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள், பழைய ஓய்வூதியம் – ஊழியர்கள் வலியுறுத்தல்!


தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காலிபணியிடங்கள்:

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அரசு துறையில் புதிய பணி நியமனங்கள் நடைபெறவில்லை. கொரோனா பரவலால் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை இதனால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இந்த நிலையில் உடுமலையில், அரசு ஊழியர் 14 வது சங்க வட்ட கிளை மாநாடு நடைபெற்றது. சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, பணப்பலன்களை வழங்க வேண்டும்.

மேலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கு, இடம் கிடைத்திட கூடுதல் இடங்களை வழங்க வேண்டும்.

அதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். .ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும். 8 வது ஊதியக்குழு பரிந்துரைக்கப்பட்ட வகையில், வழங்கப்படாத 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 Response to "தமிழக அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள், பழைய ஓய்வூதியம் – ஊழியர்கள் வலியுறுத்தல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel