
உலகப்புகழ் பெற்ற
முக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு உருவானதின் நோக்கம், காரணம், அதன் பின்னணி மற்றும் கடந்து வந்த பாதை
குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
நோபல்
பரிசு
சாதனை என்றொரு
விஷயம் சாதாரணமாக வராது. அதற்காக கிடைக்கும் வெற்றிகளை விட தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள், திறமை, அனுபவம் எல்லாம் ஒருங்கிணைந்தது தான் ஒரு
சாதனையாக வடிவமைக்கப்படுகிறது. இப்படி நாம் சொல்ல கேட்டிருப்போம், அதாவது உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாக
கருதப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் கூட தனது 100வது முயற்சியில் தான் பல்ப்பை
கண்டுபிடித்தார். இப்படி 99 முறையும் அவர் தழுவிய தோல்வி தான் அவரது சாதனைக்கு
உந்துதலாக அமைந்தது. அந்த வகையில் பல வகையான விமர்சனங்கள், எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே பெற்று
வந்த ஒருவரை, இந்த சாதனை தான் உலகம் போற்ற செய்தது.
அதாவது ஸ்வீடன் நாட்டை
சேர்ந்த பாரம்பரியமிக்க பொறியியல் குடும்பத்தில் கடந்த 1864ம்
ஆண்டு பிறந்தவர் ஆல்ப்ரடு நோபல். ஒரு வேதியியலாளராக, பொறியாளராக தனது
வாழ்க்கையை துவங்கிய இந்த ஆல்ப்ரடு நோபலை காலம் ஒரு விஞ்ஞானியாக மாற்றியது.
அதுவும் அழிவுக்குரிய விஞ்ஞானியாக. அதாவது ராணுவம், சுரங்கம், கட்டுமானத்
துறை போன்ற பல இடங்களில் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட வெடிபொருள்களை தயாரித்தவர் இவர்
தான். இது தவிர டைனமைட் எனப்படும் மோசமான சக்திவாய்ந்த பல வெடிபொருள்களும் நோபல்
என்பவர் கைகளால் தான் உருவாக்கப்பட்டவை.
அப்படி உலகம் பார்த்து
பயந்த இந்த மனிதனை தற்போது உலகம் கொண்டாடி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும்
என்றால் உலகின் மிக சிறந்த பரிசுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுக்கான
முன்னோடி இவர் தான். ஆல்ப்ரடு நோபல், அழிவுகான விஞ்ஞான உருவாக்கத்தின் உச்சத்தில் இருந்த
கால கட்டத்தில் சகோதரர் லுட்விக் நோபல் மரணித்த சமயத்தில் பல செய்தித்தாள்கள்
ஆல்ப்ரடு நோபல் தான் இறந்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டன.
குறிப்பாக ஆல்ப்ரடு
நோபலின் மரணத்தை குறிப்பிட்டு ஒரு பிரெஞ்சு இதழ் ‘மரணத்தின் தூதர் இறந்துவிட்டார்’ என பதிவிட்டது. இதை கண்ட ஆல்ப்ரடு தனது இறப்பிற்கு முன்னர்
தன்னுடைய இரங்கல் குறித்து வெளியான செய்திகளை காண்கையில் வரலாற்றில் இப்படியொரு
மோசமான மனிதனாக தாம் பதிவு செய்யப்படக்கூடாது என்று உறுதி எடுத்தார். அதனால் தான்
அதுவரை சம்பாதித்த சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காக செலவுசெய்ய முடிவெடுத்த
அவர் பல உயில்களை எழுதினார். அந்த உயிலில் முக்கியமானது தான் நோபல் பரிசுக்கான
உயில்.
இந்த நோபல் பரிசுக்காக அவர் ஒதுக்கிய தொகையின் தற்போதைய மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அந்த வகையில் 24 காரட் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட பதக்கம், பாராட்டு உரையுடன் கூடிய பதக்கம், 8 கோடி ரூபாய் பரிசு என இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயில் மூலமாக திருப்தியடைந்த நோபல் 1896ம் ஆண்டு பெருமூளை இரத்த கசிவின் காரணமாக உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு பிறகு 1901ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
0 Response to "நோபல் பரிசு உருவான வரலாறு – ஆல்ஃப்ரடு நோபலின் உயில் பரிசான கதை!"
Post a Comment