
நடந்து முடிந்த
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் 4,920 மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளையே
தேர்வு செய்துள்ளனர். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
பொறியியல்
கலந்தாய்வு:
கொரோனா தாக்கம்
தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து
பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. பொது
தேர்வு நடத்துவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என
தமிழக அரசு அறிவித்தது. பின் மாணவர்கள் கல்லூரியில் தங்களுக்கு விருப்பமான பாட
பிரிவை தேர்வு செய்து வந்தனர். மேலும் பொறியியல் கல்லூரிகளுக்கு கலந்தாய்வு
நடத்தப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளை ஆர்வத்துடன்
தேர்ந்தெடுக்காத காரணத்தால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
7.5
விழுக்காடு இட
ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 5,920
மாணவர்களில், 82 விழுக்காடு 4,920
மாணவர்கள் தனியார்
பொறியியல் கல்லூரிகளையே தேர்வு செய்துள்ளனர்.
நடந்து முடிந்த பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 5,920 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்வு செய்தனர். இதில் 4,920 பேர் தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 1,017 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ள நிலையில் 4,920 மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு செய்துள்ளனர். இதனால் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு அவர்களுக்கான கட்டணம் 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து பல கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 Response to "இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை – அரசு கல்லூரியை புறக்கணிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்!"
Post a Comment