
தமிழக அரசுத்
துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிப்பெண்கள் மற்றும் சீனியாரிட்டி
அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்துக்கு டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி
உயர்வு
கடந்த மே மாதம்
முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை காரணமாக TNPSC தேர்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் நோய் தொற்று குறைந்திருக்கும் சூழலில் இடை
நிறுத்தப்பட்டதான TNPSC தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வந்தது.
அதன் படி வரும் அக்டோபர் மாதத்தில் TNPSC குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்புகள்
வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும்
சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (TNPSC) டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது TNPSC செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பில், மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்னும் 12 வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Response to "தமிழக அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண், சீனியாரிட்டி மூலம் பதவி உயர்வு – உச்சநீதிமன்றம் காலக்கெடு!"
Post a Comment