
தமிழ்நாடு மருத்துவ
ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) அறிவித்த உணவு பாதுகாப்பு அதிகாரி
பணிக்கான விண்ணப்ப பதிவு செப்டம்பர் மாதம் 30ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்ட
நிலையில்,
இந்த செயல்முறை
அக்டோபர் 13
முதல் துவங்குவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப
பதிவு
தமிழகத்தில்
இம்மாதம் 6
மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்
நடத்தப்பட இருப்பதால், தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) அறிவித்த உணவு பாதுகாப்பு அலுவலர் (FSO) பதவிக்கான விண்ணப்ப பதிவு தேதிகள்
ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உணவு பாதுகாப்பு அலுவலர்
பணிக்கான விண்ணப்ப பதிவு செயல்முறைகள் செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புகள்
கொடுக்கப்பட்டதையடுத்து விண்ணப்ப பதிவுக்கான தேதி அக்டோபர் 13 முதல் துவங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம்
அக்டோபர் 13ம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகளை
செலுத்தலாம் எனவும், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 28 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக
வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான
மாதிரி நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் விதிமுறைகள் 13.10.2021 முதல் துவங்கி 28.10.2021வரை நடைபெறுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான
தேர்வுகள் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) அறிவித்துள்ள இந்த பணியில் மொத்தம் 119
FSO காலிப்
பணியிடங்கள் உள்ளன. இப்போது அரசு நடத்தும் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும்
விண்ணப்பதாரர்கள் 18 வயதை அடைந்திருக்க வேண்டும். மேலும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குறிப்பாக அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு
இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர இது தொடர்பான கூடுதல் விவரங்களை
தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் http://www.mrb.tn.gov.in/index.php என்ற இணையதளத்தை உபயோகிக்கும் படி
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Response to "TN MRB உணவு பாதுகாப்பு அதிகாரி 119 காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு!"
Post a Comment