அக்.4ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வி துறை அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

அக்.4ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வி துறை அறிவிப்பு!

அக்.4ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வி துறை அறிவிப்பு!


தமிழகத்தின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் வரும் அக்டோபர்
4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதாக கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

முதலாம் ஆண்டு:

தமிழகத்தில் கடந்த 2020- 2021ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பை முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் தமிழகத்தில் குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பல தரப்பு கோரிக்கைகளுக்கு உட்பட்டு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்து செயல்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் முதுகலை மற்றும் இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் முன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பொறியியல் கல்லூரிகளில் நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடந்து முடிந்து விட்டது.

இதனால் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், உரிய வழிகாட்டுதல் நடவடிக்கைகளுடன் அக்டோபர் 4ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கல்லூரி வளாகத்தில் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணிவது, தகுந்த சமூக இடைவெளியை பராமரிப்பது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

0 Response to "அக்.4ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வி துறை அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel