பவானிபூர் இடைத்தேர்தல் – முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி! தொண்டர்கள் உற்சாகம்!

Trending

Breaking News
Loading...

பவானிபூர் இடைத்தேர்தல் – முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி! தொண்டர்கள் உற்சாகம்!

பவானிபூர் இடைத்தேர்தல் – முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி! தொண்டர்கள் உற்சாகம்!


மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற பவானிபூர் இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று அசத்தியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட
58,832 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதல்வர் வெற்றி:

மேற்குவங்க மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியிடம் நந்திகிராமில் போட்டியிட்டு தோல்வியடைந்ததார். இருப்பினும் அதிக இடங்களை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தனது முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அவர் எம்எல்ஏ ஆக வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இதனால் பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அதற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி களம் கண்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவா போட்டியிட்டார். இத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காட்டுவேன் என மம்தா பானர்ஜி சவால் விட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே மம்தா பானர்ஜி முன்னிலை வகித்தார். இறுதியில் பாஜக வேட்பாளரை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்று தனது முதல்வர் பதவியை தக்கவைத்து உள்ளார். இந்த வெற்றியை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

0 Response to "பவானிபூர் இடைத்தேர்தல் – முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி! தொண்டர்கள் உற்சாகம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel