கொரோனா தொற்றுற்கு
எதிரான தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்கு நாட்டின் சுயசார்பு கொள்கை தான் காரணம்
என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சுயசார்பு
கொள்கை:
நாடு முழுவதும்
கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி முறை தான்
பின்பற்றப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் தடுப்பூசி செலுத்திக்
கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டம் மற்றும் முகாம்களை செயல்படுத்தி
வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பிரதமர் மோடி பிரபல
பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், நாட்டின் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் தற்போது 69% பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 25%
பேர் இரண்டு டோஸ்
தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். டிசம்பர் மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள
தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு
செயல்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியவில்லை என்றால் நாம்
மிகவும் மோசமான பாதிப்பை அடைந்திருப்போம். கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா
வெற்றி பெற்றதற்கு சுயசார்பு கொள்கை தான் முக்கிய காரணம். உலகின் மற்ற நாடுகளில் தடுப்பூசிக்கு
ஒப்புதல் கிடைக்காத நிலையில் இந்தியாவில் கடந்த 2020 ம் ஆண்டு மே மாதம் தடுப்பூசி இயக்கத்தை
தொடங்கினோம்.
மேலும், விரைந்து எடுக்கப்பட்ட முயற்சியினால் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.
முக்கியமாக நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக
எந்த ஒரு சிக்கலையும் அடையவில்லை. நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ள கிராம மக்கள்
முதல் டோஸ் தடுப்பூசியை கிராமத்தில் போட்டிருந்தாலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பணிபுரியும்
நகரத்தில் செலுத்திக் கொள்ளலாம். மக்களுக்கு குறித்த நேரத்தில் தடையின்றி
தடுப்பூசி வழங்குவதில் தொழில்நுட்ப உதவிகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும்
தெரிவித்துள்ளார்.
0 Response to "தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்கு சுயசார்பு கொள்கை தான் காரணம் – பிரதமர் மோடி பெருமிதம்!"
Post a Comment