
WIPRO நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பிற்கான பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்கான தகுதி வரம்புகளை
அந்நிறுவனம் விரிவாக வெளியிட்டு உள்ளது.
WIPRO வேலைவாய்ப்பு:
WIPRO என்ற பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது தற்போது
வேலைவாய்ப்பிற்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் திட்ட
பொறியாளர் எனப்படும் Project Engineer பதவிக்கு காலியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகுதியான மற்றும் திறமையும் வாய்ந்த பட்டதாரிகள் இந்த
பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு B.E, B.Tech பட்டப்படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு
மற்றும் M.Tech.படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு முடித்தவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில்
மட்டுமில்லாது பட்டப்படிப்புகளிலும் 60% அல்லது CGPA 6.0 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
அது முக்கிய தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேரம் அல்லது 10, 12ம் வகுப்புகள், பட்டப்படிப்பு ஆகியவற்றில்
தொலைதூரக் கல்வி பயின்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பதாரர்கள்
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது PIO அல்லது OCI அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அவ்வாறு
விண்ணப்பிக்கும் இந்திய பட்டதாரிகள் கடந்த ஆறு மாதங்களில் விப்ரோ நடத்திய எந்த
தேர்வு செயல்முறையிலும் பங்கேற்காதவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள்
ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். முதலில் aptitude test 48 நிமிடங்கள், இரண்டாவதாக written communication test 20 நிமிடங்கள் இறுதியாக programming test 1 மணி நேரம் என்ன 3 கட்ட சோதனைக்கு
உட்படுத்தப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சேவை ஊதியமாக ரூ.75,000/- வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வினை ஜாவா, சி, சி ++ அல்லது பைதான்
ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் எழுதலாம். ஆர்வமுள்ளவர்கள் அதன் அதிகாரப்பூர்வ
இணைய தளத்திற்கு சென்று இந்த தேர்வில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்ளலாம்.
0 Response to "WIPRO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – பட்டதாரிகளுக்கு அழைப்பு!"
Post a Comment