பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம்.

Trending

Breaking News
Loading...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம்.




2021-2022
கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு ) பொதுத்தேர்விற்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020-2021 ஆம் கல்வியாண்டில் இடைநிலைப் பொதுத்தேர்விற்கு புதிய தேர்வு மையங்களை பரிந்துரைச் செய்து அனுப்பப்பட்ட பள்ளிகளை தவிர்த்து கருத்துரு அனுப்பப்படவேண்டும். தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து , நடப்பு கல்வியாண்டு 2021-2022 இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு ) பொதுத்தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினைப் பரிசீலனை செய்து , அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை “ அ மற்றும் " " ஆகியவற்றைப் பூர்த்தி செய்து உரிய முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று கருத்துருவினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும். 

மேலும் , மார்ச் 2020 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் ( சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை / நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் ) மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது. தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின் , அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துரு அனுப்புதல் வேண்டும். 

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும் . புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் , இத்துடன் இணைத்தனுப்பப்படும் அரசாணையில் உள்ள விதிகளின்படி , தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பள்ளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் இத்துடன் அனுப்பப்படும் பிற்சேர்க்கை “ அ மற்றும் " " வில் சரியான முறையில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கலாகிறது. 10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம் :

SSLC Public Exam - New Centre Request Format - Download here...

0 Response to "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம்."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel