
இந்தியாவில்
முக்கியமான ஆவணமாக பார்க்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையை சுலபமாக எப்படி
ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை
வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
வாக்காளர்
அடையாள அட்டை
இந்தியாவில்
வாக்காளர் அட்டை வைத்து தான் மக்கள் தேர்தலில் வாக்களிக்கவும் முடியும். வாக்காளர்
அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் ஆதார், லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களையும்
வாக்களிக்க பயன்படுத்தலாம். கூடுதலாக, ஒருவரிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், வாக்காளர் அட்டை வைத்து தங்களது தேவைகளை
பூர்த்தி செய்து கொள்ளலாம். முகவரி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும், வாக்காளர் அட்டை வைத்து விண்ணப்பிக்கலாம்.
இப்படியாக இருக்க, இந்த வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய இன்று வரை மக்கள்
கஷ்டப்பட்டு தான் வருகின்றனர். இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக தற்போது தேர்தல்
ஆணையம் சுலபமான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக வாக்காளர் அடையாள
அட்டையினை எப்படி பெற வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
வழிமுறைகள்
·
முதலில், https://voterportal.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ
இணையத்தளத்தினை ஓபன் செய்யவும்
·
அதில் உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி வைத்து ஒரு புதிய கணக்கினை
துவங்க வேண்டும்.
·
பின்னர், திரையில் வாக்காளர் அடையாள அட்டையினை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன்
குறித்து கேட்கப்படும்.
·
அதனை கிளிக் செய்ததும், டிஜிட்டல் வாக்காளர் அட்டை பிடிஎஃப் பார்மட்டில்
பதிவிறக்கம் செய்யப்படும்.
· அதனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம்.
0 Response to "Digital Voter ID – வாக்காளர் அடைய அட்டை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!"
Post a Comment