EMI கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ‘ஆட்டோ டெபிட் முறை’ இனி கிடையாது!

Trending

Breaking News
Loading...

EMI கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ‘ஆட்டோ டெபிட் முறை’ இனி கிடையாது!

EMI கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ‘ஆட்டோ டெபிட் முறை’ இனி கிடையாது!


வங்கிகளில் மாத
EMI முறையில் வீடு, வாகனம் போன்றவற்றிற்காக கடன் பெற்றவர்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆட்டோ டெபிட்:

பொதுவாக வங்கி மற்றும் நிதி நிறுனங்களில் பெறப்படும் வீடு, வாகனம் போன்ற கடன்களுக்கு மாத EMI கட்டுவதற்கு தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் EMI ஆனது அவர்களது ஊதிய கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் முறையில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 2019 ம் ஆண்டு வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பியது.

ரிசர்வ் வங்கி அறிக்கையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அனைத்தும் Additional Factor Authentication’ அங்கீகாரத்தை 2021ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்து கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஆனால் ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30ம் தேதிக்குள் இதற்கான ஏற்பாடுகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ரிசர்வ் வங்கி அளித்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதன் பிறகும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உருவாக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, தவணைத் தொகை எடுக்கப்படும் தேதிக்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே வாடிக்கையாளரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலமும், மின்னஞ்சல் மூலமும் வங்கிகள் தகவல் அனுப்ப வேண்டும்.

வாடிக்கையாளர்கள், இதன் அடிப்படையில், தொகைகளை எடுக்க அனுமதி அளிக்கவும் அல்லது தொகையின் அளவை திருத்தி அமைக்கவும் வகை செய்யப்படுகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் அறிந்து கொள்ளாலாம்.

0 Response to "EMI கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ‘ஆட்டோ டெபிட் முறை’ இனி கிடையாது!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel