தமிழக அரசின் குடிநீர், மின் இணைப்பு ‘இனி’ வழங்கப்பட மாட்டாது – இந்த கட்டடங்களுக்கு மட்டும்!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசின் குடிநீர், மின் இணைப்பு ‘இனி’ வழங்கப்பட மாட்டாது – இந்த கட்டடங்களுக்கு மட்டும்!

தமிழக அரசின் குடிநீர், மின் இணைப்பு ‘இனி’ வழங்கப்பட மாட்டாது – இந்த கட்டடங்களுக்கு மட்டும்!


தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க பலரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் நிலைகள்
, புறம்போக்கில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு குடிநீர், மின் இணைப்பு வழங்கப்படாது.

அரசு நிலங்கள் மற்றும் நீர் நிலைகள்:

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும், ஏரி பகுதியில் கொட்டப்படும் குப்பையை அகற்றவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மாநிலம் முழுவதும் நீர் நிலைகள், வனப்பகுதியில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

தற்போது நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்களுக்கு இனி குடிநீா் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக்கூடாது என, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடையாறு, கூவம் ஆறு மற்றும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கால்வாய்களை ஆக்கிரமித்து வசித்து வந்த 18,363 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவா்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீா் நிலைகளைப் பராமரிக்கும் துறைகள் சா்வே எண், தெரு எண்களை தெரிவிக்க வேண்டுமென பதிவுத்துறை அறிவுறுத்த வேண்டும் எனவும் அரசு துறைகள் வழங்கியுள்ள நீா் நிலைகள் குறித்த விவரங்களில் அவற்றை அரசு நிலம் என்றும், அவற்றின் மதிப்பு பூஜ்ஜியம் என பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்த பத்திரங்கள் போலியாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ரத்து செய்ய பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 Response to "தமிழக அரசின் குடிநீர், மின் இணைப்பு ‘இனி’ வழங்கப்பட மாட்டாது – இந்த கட்டடங்களுக்கு மட்டும்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel