
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளி
போனால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளி சங்கங்களின்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு
கடந்த 1
ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்
திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும்
பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக
பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் தொடக்க நிலை மாணவர்களின் கல்வி நிலை கேள்வியாக உள்ளது
என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது . இதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகளை
திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தற்போது நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு
அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.19 மாதங்களாக பள்ளி மூடப்பட்டுள்ளதால் பள்ளி
வாகனங்களை மீண்டும் தயார் செய்ய லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்று கருத்து
தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள்
கல்வி கட்டணம் செலுத்தாமல் உள்ளதால் நெருக்கடி நிலையில் உள்ளனர்.
0 Response to "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு? தனியார் கூட்டமைப்பு எச்சரிக்கை!"
Post a Comment