
மதுரை காமராஜா் பல்கலைக்கழக
தொலைநிலைக்கல்வி மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில் இதற்கான கால அவகாசம்
டிசம்பா் 15
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சோ்க்கை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள்
மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு
வந்தன. 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை
தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்வு
செய்து படித்து வருகின்றனர். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி
மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காமராஜர் பல்கலைக்கழக
தொலைநிலைக் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காமராஜா்
பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து இளங்கலை, முதுகலை, எம்பிஏ, எம்சிஏ உட்பட அனைத்து பட்டயப்
படிப்புகளுக்கும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை
டிசம்பா் 15
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மாணவர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மாணவா் சோ்க்கைக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் அல்லது நேரடியாக பல்கலைக்கழகம் சென்று விண்ணப்பிக்கலாம்.
0 Response to "மதுரை காமராஜா் பல்கலை மாணவா் சோ்க்கை – காலஅவகாசம் நீட்டிப்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு!"
Post a Comment