கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆஸி அங்கீகாரம்!

Trending

Breaking News
Loading...

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆஸி அங்கீகாரம்!

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆஸி அங்கீகாரம்!


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு
கொரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே இத்தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பயணிகளுக்கு அந்நாட்டிற்குள் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இரண்டு நிறுவன தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் என தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த போது இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே முதற்கட்டமாக செலுத்தப்பட்டது.

அதன்பின் மத்திய அரசின் அனுமதியுடன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குள் தடையின்றி வரலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதே போல சீனாவின் சினோவேக்ஸ் தடுப்பூசிக்கும் ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. சர்வதேச பயணிகள் கோவிஷீல்டு, சினோவேக்ஸ் ஆகிய இரு தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை இரு டோஸ்கள் செலுத்தியிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை. முழுமையாக தடுப்பூசி செலுத்திய ஆஸ்திரேலிய மக்கள், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் இனிமேல் ஹோட்டலில் தனிமைப்படுத்தாமல் வீடுகளில் மட்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தினால் அதுவே போதுமானது. மேலும் தடுப்பூசி செலுத்தாத பயணிகள் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 Response to "கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஆஸி அங்கீகாரம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel