
உங்கள் ஆதார் தொலைந்து விட்டாலோ அல்லது
ஆதார் எண்ணை நீங்கள் மறந்து விட்ட நிலையிலும் கூட நீங்கள் ஆன்லைன் மூலம் எளிதாக
உங்கள் ஆதார் அட்டையை பெற முடியும்.
ஆதார் கார்டு:
இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக
கருதப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகும். தற்போதைய
கால கட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது. முதல் முறையாக ஆதார்
அட்டை வழங்கிய போது அதில் பிறந்த வருடம் மட்டுமே இடம் பெற்றது. அதன் பிறகு ஆதார்
அமைப்பு ஆன்லைன் மூலம் தேவைக்கேற்ப விவரங்களை மாற்றி கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியது.
அதன் மூலம் ஆதாரில் உள்ள உங்களின் பெயர், முகவரி, புகைப்படம் போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு வேளை உங்கள் ஆதார் அட்டை தொலைந்து
விட்டால் ஆன்லைன் மூலம் புதிய ஆதார் அட்டை பெறலாம். அதற்கு உங்கள் ஆதார் எண்
அவசியம். ஒரு வேளை உங்கள் ஆதார் எண் உங்களுக்கு முற்றிலும் மறந்து விட்டால் இந்த
நிலையிலும் கூட உங்கள் புதிய ஆதார் அட்டையை பெறலாம். மறந்துபோன ஆதார் அட்டை எண்ணை
கண்டுபிடிப்பது மிக சுலபம் இழந்த ஆதார் அட்டை எண்ணை அறிய இதற்காக, உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார்
அட்டையுடன் இணைப்பது அவசியம் இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.
·
முதலில் https://resident.uidai.gov.in/lostuideid என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
·
அதன் பிறகு உங்கள் ஆதார் அட்டையில் எழுதப்பட்ட பெட்டியில் உங்கள் அதே
பெயரை உள்ளிட வேண்டும்
·
மேலும் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட
வேண்டும்.
·
இறுதியாக பெட்டியில் உள்ள கேப்ட்சா குறியீடை பதிவிட்டு உங்கள் மொபைல்
எண்ணிற்கு OTP அனுப்பவும்.
· இந்த நடைமுறைகளுக்கு பிறகு சிறிது நேரம் கழித்து உங்கள் ஆதார் எண் நேரடியாக உங்கள் மொபைல் எண்ணில் வரும்.
0 Response to "UIDAI புதிய ஆதார் கார்டை பெறும் எளிய வழிமுறைகள் இதோ!"
Post a Comment