
தமிழக
அரசு சார்பில் பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நலத்திட்டங்கள்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் படி ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக
மாற்றுவதற்காக 38 ஆயிரம் பேருக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
முன்னொரு
காலத்தில் பெண்களை அடிமையாக நடத்தும் பழக்கம் இருந்ததது. அதை முறியடிக்க பல தேச
தலைவர்கள் போராடி இறுதியில் ஆணும், பெண்ணும்
சமம் என்ற அளவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தாலும் பெண்களுக்கான உரிமைகள் பல
மறுக்கப்படுகிறது. அதனால் அரசு பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி 1989
ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க சட்டம்
இயற்றப்பட்டது. அதை தொடர்ந்து திருமண உதவி திட்டம், மகப்பேறு
நிதி உதவி திட்டம், விதவை உதவித்தொகை போன்றவை
வழங்கப்பட்டுள்ளது.
மேலும்
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000
உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டது.
அந்த திட்டம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆதரவற்ற
பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோராக மாற்ற 38
ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள்
வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில்,
ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட,
ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்க ரூ.75
கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தற்போது தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற 38 ஆயிரம் பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்
மூலம் பயனடைவோர்களில் குறைந்தது 30% எஸ்.சி மற்றும் எஸ்.டி
பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து அதன் மூலம் தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Response to "தமிழகத்தில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் – அரசாணை வெளியீடு!"
Post a Comment