
தமிழகத்தில்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா காந்தி
தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா
காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா
காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்
திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள்
ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை பயனாளிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும்
முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஆதரவற்ற கணவனால்
கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டம், ஐம்பது வயதிற்கு
மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகிய ஓய்வூதியத்
திட்டங்களின் வாயிலாக மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் முதியோர் ஓய்வூதிய திட்டம் உட்பட மொத்தம் 8 ஓய்வு திட்டத்தில் பயன்பெற இனி ஆதார் கட்டாயமாக இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யாத நபர்கள் இருந்தால் ஆதார் பதிவு மையத்தில் அல்லது www.uidai.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற ஆதார் எண் கட்டாயம்…! தமிழக அரசு"
Post a Comment