
உலகில்
பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் YouTube – ல் இனிமேல் வீடியோ
பார்ப்பவர்களுக்கு டிஸ்லைக் எண்ணிக்கை தெரியாத வகையில் புதிய அப்டேட் ஒன்றை
செயல்படுத்த உள்ளதாக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
YouTube
டிஸ்லைக்:
உலகில்
பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் இணைய வலைத்தளங்களில் இரண்டாவது இடத்தை
பிடித்திருப்பது YouTube.
அதாவது கூகுளுக்கு பிறகு YouTube – ஐ தான்
பெரும்பாலானோர் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த YouTube – ல் படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று இரண்டே பேர் தான் உள்ளனர்.
படைப்பாளர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களை பொறுத்து
அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதனால் தற்போது அதிக அளவிலான
படைப்பாளர்கள் YouTube
– ல் வளர்ந்து வருகிறார்கள். அவ்வாறு வெளியிடப்படும் YouTube
வீடியோக்களில் லைக், டிஸ்லைக், ஷேர், டவுன்லோட், கிரியேட்
மற்றும் சேவ் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இந்த வசதிகளில் தற்போது டிஸ்லைக்
வசதியில் உள்ள எண்ணிக்கையை பார்ப்பவர்களுக்கு தெரியாத வகையில் புதிய மாற்றத்தை
கொண்டு வர முடிவு செய்துள்ளதாக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது..
இந்த அறிமுகம் படைப்பாளர்களின் வீடியோக்களுக்கு அளிக்கப்படும் டிஸ்லைக் எண்ணிக்கையை குறிவைத்து சிலர் அதனை நிராகரித்து வருவதை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்கள் டிஸ்லைக் பட்டனை பார்க்கலாம் மற்றும் பயன்படுத்தலாம், ஆனால் எண்ணிக்கை அவர்களுக்குத் தெரியாது. இதனால் சிறிய படைப்பாளிகள் தாங்கள் புதிய சேனலை தொடங்கிய சமயத்தில் இதுபோன்ற செயலால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக YouTube நிறுவனம் கருதுகிறது. எனவே அறிவிப்பின்படி இந்த மாற்றம் படிப்படியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "YouTube இல் இனிமேல் Dislike எண்ணிக்கை தெரியாது – புதிய அம்சம் அறிமுகம்!"
Post a Comment