
தமிழகத்தில்
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.
பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
மின்
கட்டணம்:
தமிழகத்தில்
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மின்சாரத் துறையில் தொடர் கவனம்
செலுத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இனி மாதந்தோறும் மின்
கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த
நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த மே மாதத்தில் அனைத்து துணை மின்
நிலையங்களிழும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊரடங்கு
காலத்தில் மின் கட்டணம் செலுத்த மக்களுக்கு கூடுதல் கால அவகாசமும் வழங்கப்பட்டது.
மின் தொடர்பான புகார்களை அளிக்க
உதவி மையம் அமைக்கப்பட்டு மின் தொடர்பான குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு
வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் மின்கசிவு ஏற்படாத
வண்ணம் மின்சாரத்துறை ஊழியர்கள் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று
அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில்
மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின்தடை ஏற்படாது
என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னெச்சரிக்கையாக 4,047 மின்மாற்றிகளில்
41 மின் மாற்றிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது வரை
மின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லை. நிலக்கரி போதுமான அளவு உள்ளது என்றும்
தெரிவித்துள்ளார். மேலும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று அதிமுக
ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் மக்கள்
மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் கோரவில்லை.அது அவரின் கருத்து ஆகும். இருந்தாலும்
இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும்
என்று விளக்கமளித்துள்ளார்.
0 Response to "தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்!"
Post a Comment