திருப்போரூர்: சிறப்பு கல்விக்கான இளநிலை மற்றும்
முதுநிலை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சென்னை அருகே முட்டுக்காட்டில் மத்திய அரசின் சமூகநீதித் துறையின் கீழ், இயங்கும் ஒன்றுக்கும்
மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்கான தேசிய நிறுவனம் செயல்படுகிறது. இங்கு,
பல்வேறு குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கற்பித்தல், கல்வி மேம்பாடு,
நிர்வாகம் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த மையத்தில் சிறப்பு கல்விக்கான
இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வழங்கும் விழா நிறுவன வளாகத்தில் நடந்தது. யுனைடெட் வே மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின்
சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 21 மாணவர்களுக்கு ரூ.10.42 லட்சம் உதவித்தொகையை
முனைவர் அபிநயா, துணைப் பதிவாளர் சங்கர நாராயணன், துணைப் பதிவாளர் (பொறுப்பு) அமர்நாத்
ஆகியோர் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை"
Post a Comment