CBSE Public Exam Date : சிபிஎஸ்இ 2ம் கட்ட பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு... நேரடிமுறையில் நடைபெறுகிறது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
(சிபிஎஸ்இ) இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நேரடி
முறையில் நடைபெறும் என்றும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ம் ஆண்டு
ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும்
விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.
அதன்படி, முதல் கட்ட பொதுத் தேர்வு கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2ம் கட்ட பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து சிபிஎஸ்இ ஆலோசனை மேற்கொண்டது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையும் சிபிஎஸ்இ கணக்கில் கொண்டது.
0 Response to "CBSE Public Exam Date : சிபிஎஸ்இ 2ம் கட்ட பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு... நேரடிமுறையில் நடைபெறுகிறது"
Post a Comment