டேவிட்: என்ன எழிலி, தமிழில் நீதான் முதல் மதிப்பெண் வாங்கியுள்ளாய். வாழ்த்துகள்.
எழிலி: நன்றி… நன்றி.
மும்தாஜ் : என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா
எனத் தேடிக்கொண்டிருந்தேன். எழிலி என் ஐயங்களை நீக்குவாயா?
எழிலி: கண்டிப்பாக … கேள் மும்தாஜ்.
மும்தாஜ் : நம்மிடமெல்லாம் ‘லேப்டாப்’ உள்ளது. அதை நாமெல்லாம் பயன்படுத்துகிறோம். அப்போது நாம் பல சொற்களை
ஆங்கிலத்தில் கூறுகிறோம். அவற்றுக்கெல்லாம் தமிழ்ச்சொற்கள் உள்ளனவா எழிலி?.
எழிலி: உறுதியாக உள்ளன மும்தாஜ். என்னென்ன சொற்களுக்குத் தமிழ்ச்சொல்
வேண்டும். சொல் மும்தாஜ்.
மும்தாஜ்: சாப்ட்வேர் [software] பரௌசர் [browser], க்ராப் [crop], கர்சார் [cursor], சைபர்ஸ்பேஸ் [cyberspace], சர்வர் [server], ஃபோல்டர் [Folder] – இவற்றுக்கெல்லாம் முதலில் தமிழ்ச் சொல் கூறுவாயா எழிலி.
எழிலி: லேப்டாப் என்பதற்கு மடிக்கணினி என்றும், சாப்ட்வேர் [software]
என்பதற்கு மென்பொருள் என்றும், பரௌசர் [browser] என்பதற்கு உலவி என்றும், க்ராப் [crop] என்பதற்குச் செதுக்கி என்றும், கர்சார் [cursor] என்பதற்கு ஏவி அல்லது சுட்டி என்றும், சர்வர் [server] என்பதற்கு வழங்கி என்றும், ஃபோல்டர் [Folder] என்பதற்கு உறை என்றும் சைபர்ஸ்பேஸ் [cyberspace] என்பதற்குக் கணினியகம் என்றும்
தமிழ்ச்சொல் கூறலாம் மும்தாஜ்.
டேவிட்: அருமை.. அருமை. எனக்கும் சில ஐயங்கள் எழிலி.
எழிலி: சொல் டேவிட்.
டேவிட்: கணிதத்தில் ஒன்று, பத்து, ஆயிரம் ஆகிய எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச்சொற்கள் எனக்குத் தெரியும். மில்லியன் [106] [million], பில்லியன் [109] [billion] ஆகிய எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச் சொற்களை எனக்குச் சொல்வாயா எழிலி.
மும்தாஜ்: ஆமாம்… ஆமாம்… எனக்கும் அந்த ஐயம் உண்டு.
எழிலி: மில்லியன் என்பதற்கான தமிழ்ச்சொல்
மெய்யிரம் என்பதாகும். பில்லியன் என்பதற்கான தமிழ்ச்சொல் தொள்ளுண் என்பதாகும். இவை தவிர ஈகியம் [1012], நெளை [1015], இளஞ்சி [1018], வெள்ளம் [1020], ஆம்பல் [1021] எனப் பெரும்பெரும் எண்ணிக்கைகளுக்கும் தமிழ்ச்சொற்கள்
உள்ளன மும்தாஜ்.
இணைய இணைப்பு: https://en.wikipedia.org/wiki/Tamil_numerals |
டேவிட்: இச்சொற்களெல்லாம் எனக்கு ஏன் தெரியவில்லை எழிலி?.
எழிலி: இச்சொற்களை நாம் நம் புழக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அனைவருக்கும்
தெரிந்திருக்கும். என்ன மும்தாஜ் ஏதோ எண்ணிக் கொண்டிருக்கிறாய்?
மும்தாஜ்: நீ சொல்வதெல்லாம் நன்றாகப் புரிகிறது. இவ்வளவு வளர்ச்சிபெற்ற நாம்
ஏன் கணினித்துறைச் சொற்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கிறோம் எழிலி.
எழிலி: நல்ல வினா மும்தாஜ். ஒரு துறை எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்குள்ள மொழி அத்துறையில் செல்வாக்குப்
பெற்றிருக்கும். அத் துறையைப் பெறுபவர்கள் அது சார்ந்த மொழிக்கூறுகளைத் தம் மொழியில் மாற்ற
வேண்டும்.
மும்தாஜ்: ஏன் மாற்ற வேண்டும்?
எழிலி: லாங்மா, பாய்மா, , தியன்மா, டன்ஹுவாங் – இப்போது நான் கூறியவற்றை
மீண்டும் கூறு மும்தாஜ்.
லாங்மா – பாம்புக் குதிரை பாய்மா – வெள்ளைக் குதிரை தியன்மா – பறக்கும் குதிரை [மேலுலகம் செல்லும் குதிரை] டன்ஹுவாங் – சீனாவில் வெள்ளைக் குதிரைக் கோயில் உள்ள இடம் |
டேவிட்: பாய்மா…ம்… என்ன விளையாடுகிறாயா? இச் சொற்களில் சில வாயிலேயே
நுழையவில்லை. பின் எப்படி மனத்தில் நுழையும்.
எழிலி: சரியாகக் கூறினாய். வேற்று மொழிச் சொற்களை எளிதாக நாம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வதற்கு
மேலும் நேரத்தைச் செலவிடவேண்டும். நம் சிந்தனை வேகத்தையும் இது மட்டுப்படுத்தும். இது ஒருபுறமிருக்க ஒரு காலகட்டத்தில் தாய்மொழி சார்ந்த சொற்களின் எண்ணிக்கையைவிட வேற்று
மொழிச் சொற்களின் எண்ணிக்கை மிகுதியாகும்.
எனவேதான் நம் வாழ்க்கையில் இடம்பெறும்
அறிவியல் கருத்துகளை எல்லாம் நம் மொழியிலும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
டேவிட் : எனக்கோர் ஐயம்
எழிலி: என்ன?
டேவிட்: வளர்ந்த துறைகளுக்கான சொற்களை வேற்று மொழிகளிலிருந்து தமிழ் பெறுவதைப்
போன்று, வேற்று மொழிகள் தமிழிலிருந்து பெற்றுள்ளனவா?
எழிலி: பெற்றுள்ளன டேவிட். தமிழர்கள் தொல் காலத்திலேயே கடல் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தனர். சங்க இலக்கியத்தில் நாவாய், வங்கம், தோணி, கலம் போன்ற பலவகையான கடற்கலன்கள் இயக்கப்பட்டதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. இதில் தமிழ்ச்சொல்லாகிய நாவாய் என்பதே ஆங்கிலத்தில்
நேவி என ஆகியுள்ளது டேவிட்.
மும்தாஜ்: தமிழரின் கடல் ஆளுமை சார்ந்த வேறு எவ்வகைச் சொற்கள் எவ்வெம் மொழிகளில்
இடம்பெற்றுள்ளன எழிலி.
எழிலி: உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது கிரேக்க
மொழியாகும். இம் மொழியின் கடல் சார் கருத்துக்களில்
போன்ற தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் கற்க “கிரேக்கக் காப்பியத்தில் மகாபாரதத் தமிழர்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவன
வெளியீடு |
மும்தாஜ்: மிக வியப்பாக இருக்கிறது. கடல் சார்ந்த சொற்கள் மட்டும்தாம்
தமிழிலிருந்து வேற்று மொழிகளுக்குச் சென்றுள்ளனவா எழிலி.
எழிலி: பல்வேறு துறை சார்ந்த தமிழ்ச்சொற்களும் வேற்று மொழிக்குச் சென்றுள்ளன
மும்தாஜ்.
டேவிட்: மிக ஆவலாக உள்ளது. விரிவாகக் கூறுகிறாயா.
எழிலி: பண்டைத் தமிழர்கள் கடலில் அறிவியல் சார்ந்த முன்னேற்றம் பெற்றிருந்தது
போன்றே கவிதையியலிலும் முன்னேற்றம் பெற்றிருந்தனர். எனவே இத் துறை சார்ந்த சொற்களும்
தமிழிலிருந்து கிரேக்கத்திற்குச் சென்றுள்ளதைக் காணமுடிகிறது.
தமிழில் பா என்றால் என்னவென்று உனக்குத் தெரியும். இச் சொல் கிரேக்க மொழியில்
கி.மு.எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
உலகின் மிகத் தொன்மையான காப்பியமாகிய இலியாத்தில் παιήονα [பாய்யியோனா] எனப் பயில்கிறது. அப்போலோ கடவுளுக்குப் பாடப்படுவது பா எனக் கிரேக்கத்தில் குறிக்கப்படுகிறது.
பாவில் ஒரு வகை வெண்பா என்பது உனக்குத் தெரியும். வெண்பாவின் ஓசையானது செப்பலோசை
ஆகும். கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் செப்பொ என அழைக்கப்படுகின்றன.
இது கிரேக்கத்திலிருந்து இலத்தின் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் சேப்பிக்
ஸ்டேன்சா என்று இன்று வழங்கப்படுகிறது.
பாவின் சுவைகளில் ஒன்றாக இளிவரல் என்ற துன்பச் சுவையினைத் தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் ελεγεία [இளிகியா] என அழைக்கப்படுகின்றன.
மேலும் கற்க “கிரேக்க இலக்கியத்தில் ஆதிமந்தியும் வெண்பாவும்” [நூல்] |
இவ்வாறு தமிழர்கள் உயர் துறைகளில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது போன்றே வேற்று மொழியினரும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
டேவிட்: எனக்கொரு ஐயம்
எழிலி: கேட்கலாம் டேவிட்.
டேவிட்: இன்று வேற்று நாட்டினருடன் தொடர்புகொள்வதற்குக் கணினி உள்ளது, சென்றுவர வானூர்தி உள்ளது. அன்று அவர்கள் எவ்வாறு தொடர்புகொண்டிருந்தனர்
எழிலி.
எழிலி: நல்ல கேள்வி. நான் முன்னரே தமிழரின் கடல் ஆளுமை பற்றி விளக்கினேன் அல்லவா. அவ்வாறுதான் தொடர்புகொண்டனர்.
மும்தாஜ்: விளக்கமாகக் கூறு எழிலி.
எழிலி: கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்பதைக்
கிரேக்க நூலொன்று விளக்குகிறது.
இக் கடல்வழியைப் பற்றி விளக்கும் நூலின் பெயர்
ªðK¹ôv ÝŠ î âPF«óQò¡ î£ôR
டேவிட்: எவ்வளவு வியப்பாக உள்ளது. இந்நூலில் தமிழ்நாடு பற்றியெல்லாம்
குறிப்பிடப்பட்டுள்ளதா எழிலி?
எழிலி: குறிப்பிடப்பட்டுள்ளது டேவிட். அவ்வளவு ஏன்? இந்நூலின் பெயரிலேயே தமிழ்ச்சொல்
இருப்பதாகக் கூறுகின்றனர்.
மும்தாஜ்: அப்படியா?
எழிலி: எறிதிரை என்னும் கடலைச் சார்ந்த பெரிய புலம் என்பதே எறிதிரேசியன் ஆப்
த பெரிபுலஸ் என ஆகியுள்ளது.
மும்தாஜ்: இக்கடல் வழியாகத்தான் தொல் தமிழ்நாட்டின் பல்துறை வளர்ச்சி கிரேக்கத்திற்குச்
சென்றுள்ளதா எழிலி.
டேவிட்: சரியாகக் கூறினாய் மும்தாஜ். அந்த வளர்ச்சியை நாம் மேலும்
வளர்க்க வேண்டும் எழிலி.
எழிலி: ஆமாம். அதற்காகத்தான் வளர்ந்துகொண்டிருக்கும் அறிவியல் துறைகளை உடனுக்குடன் தமிழ்மொழிக்குக்
கொண்டுவந்து, தமிழ்ச் சொற்களைக் கொண்டு அத் துறைகளைத் தமிழர்கள் மேலும் வளர்க்க வேண்டும்
என்கின்றனர்.
மும்தாஜ்: ஆமாம்… ஆமாம்… இதைத்தானே அறிவியல் தமிழ் என்கிறோம்.
டேவிட்: நம் தமிழ்மொழி நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் தமிழ் மொழியை அறிவுக்கான கருவியாக மாற்ற, மருத்துவம், பொறியியல், கணினி என்று எல்லாத்
துறை சார்ந்த தகவல்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும். தமிழில் உள்ள தத்துவம், அரசியல் சிந்தனைகளை
எல்லாம் இதர மொழிகளில் கொண்டுச்செல்ல வேண்டும். இதுவே நம் தமிழ் மொழி
உயிர்த்திருக்க முக்கியமான வழியாகும்.
எழிலி: சரியாகக் கூறினாய். இதுபற்றி மற்றொரு நாளில் மிக விரிவாக உரையாடலாம் மும்தாஜ்.
டேவிட், மும்தாஜ்: நன்றி எழிலி, வருகிறோம்.
செயல்பாடு
அ. நீங்கள் நாள்தோறும்
வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிடுக.
சொற்பட்டியல் |
(உ.ம்) வகுப்பு, புத்தகம், பிளாக்
போர்டு, பேனா, பென்சில், நோட்டு ------------------------------------------------------------------------------------------------ |
ஆ. நீங்கள் உருவாக்கிய
பட்டியலில் கண்டுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களைக் கேட்டறிந்து எழுதுக.
பிறமொழிச் சொல் |
நிகரான தமிழ்ச்சொல் |
(உ.ம்) பிளாக் போர்டு |
கரும்பலகை |
|
|
|
|
Question 1.
நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப்
பட்டியலிட்டு, அவற்றில்
இடம் பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை அறிந்து எழுதுக.
Answer:
Question 2.
உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத்
தமிழாக்கம்செய்க.
அருண் : ஹலோ! நண்பா !
நளன் : ………………………………..
அருண் : உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?
நளன் : ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது
நான்
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறேன், நீ…..
அருண் : ………………………………..
நளன் : அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு
படிக்கிறான்.
அருண் : ………………………………..
நளன் : மீண்டும் பார்க்கலாம்.
Answer:
அருண் : ஹலோ! நண்பா !
நளன் : வணக்கம் நண்பா .
அருண் : உன்னைப் பார்த்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இல்லையா?
நளன் : ஆமாம்! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன நீ என்ன செய்கிறாய். இப்போது
நான்
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிகிறேன், நீ…..
அருண் : நான் நந்தனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.
நளன் : அந்தக் கல்லூரியில் தான் என் தம்பி வணிகவியல் முதலாமாண்டு
படிக்கிறான். அருண் : மிக்க நன்றி, மீண்டும் சந்திப்போம்.
நளன் : மீண்டும் பார்க்கலாம்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) வங்கம், மானு, தாழிசை,
பிறவினை
ஆ) தாழிசை, மானு, பிறவினை,
வங்கம்
இ) பிறவினை, தாழிசை, மானு,
வங்கம்
ஈ) மானு, பிறவினை, வங்கம்,
தாழிசை
Answer:
அ) வங்கம், மானு, தாழிசை,
பிறவினை
குறுவினா
Question 1.
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களை
தருக.
i) Moniter – திரை
ii) Mouse – நகர்த்தி (அல்லது) சுட்டி
iii) Keyboard – விசைப்பலகை
iv) CD – குறுந்தட்டு
v) Download – பதிவிறக்கம்
vi) File – கோப்பு
vii) E-Mail – மின்ன ஞ்சல்
சிறுவினா
Question 1.
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில்
எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
Answer:
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொற்கள் கிரேக்க
மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளன.
Question 2.
வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத்
தொகுத்து அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக.
கூடுதல் வினாக்கள்
குறுவினா
Question 1.
கடற்கலன்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
நாவாய், வங்கம், தோணி,
கலம்.
சிறுவினா
Question 1.
தமிழில் கணினி தொடர்பான சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
சாப்ட்வேர் – மென்பொருள்
கர்சர் – ஏவி அல்லது சுட்டி
க்ராப் – செதுக்கி
போல்டர் – உறை
0 Response to "9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - விரிவானம் - வளரும் செல்வம் - வினா விடைகள் "
Post a Comment