ஆதிதிராவிடர் துறையில் 197 ஆசிரியர்கள் பணி நியமனம்!!!

Trending

Breaking News
Loading...

ஆதிதிராவிடர் துறையில் 197 ஆசிரியர்கள் பணி நியமனம்!!!

ஆதிதிராவிடர் துறையில் 197 ஆசிரியர்கள் பணி நியமனம்!!!


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட
197 பேருக்கு பணி நியமன ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் முதல் நிலை, கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு, 197 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

 

ஐ.ஐ.டி., வழியாக பி.எஸ்சி., 'டேட்டா சயின்ஸ் அண்டு அப்ளிகேசன்ஸ்' மற்றும் எச்.சி.எல்., நிறுவனத்தின் வழியாக, பி.எஸ்சி., மருத்துவம் மற்றும் ஹோட்டல் நிர்வாகம், உணவு உற்பத்தி, 'கிராப்ட்மேன்ஷிப்' ஆகிய டிப்ளமா படிப்புகள் படிக்க, 130 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

 

இம்மாணவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்க, பயிற்சித் தொகையும் வழங்கப்பட உள்ளது.

 

0 Response to "ஆதிதிராவிடர் துறையில் 197 ஆசிரியர்கள் பணி நியமனம்!!!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel