பணி நிறைவு செய்த A.ரத்தினசாமி அவர்களுக்கு நினைவுப் பரிசை தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து இருபால் ஆசிரியர்களும் இணைந்து அவர்களுக்குக் கொடுத்தார்கள். மிகச் சிறப்பான நினைவுப் பரிசாக அவை அமைந்திருந்தது. தங்கமும் துணிமணிகளும் பழங்களும் என்று அந்த நினைவுப் பரிசு மிக அழகானதாக இருந்தது. அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் ரத்தினசாமி குறித்து அவரது சிறப்புகளை மிக அருமையாக கூறினார்கள். அவரது பணி தொடங்கியது முதல் இந்நாள் வரை அவரது நல்ல செயல்களையும் குறிப்பிட்டு அவரை அவரது இளமைக் காலத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மேலும் அவருடன் பணியாற்றிய வேறு பள்ளிகளில் இருந்தும் நிறைய ஆசிரியர்கள் கலந்து கொண்டு அவரது சிறப்புகளை எடுத்துரைத்தனர். குறிப்பாக கவரைப்பேட்டை பள்ளியில் இருந்து அதிகமான ஆசிரியர்களும் வந்திருந்து அவருக்குச் சிறப்பு செய்து அவரைக் குறித்து வாழ்த்திப் பேசினார்கள். மேலும் அயனம்பாக்கம் பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் வருகை தந்திருந்து அவருக்குச் சிறப்பு செய்தார்கள். அவரது அருமை பெருமைகளையும் மிக விளக்கமாக கூறினார்கள். மிகச் சிறப்பாக நிகழ்வானது நடந்தேறியது.
அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்து திரு. A. ரத்தினசாமி அய்யாவிற்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்து அவரைக் குறித்து சிறப்பாக பேசினார்கள். அனைத்து இருபால் ஆசிரியர்களும் அவரது நற்பண்புகளை மிக விரிவாக பேசினார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவரது செயல்களைப் பேசி அவரை மகிழ்வித்தனர். மேலும் நிகழ்வின் அடுத்த பகுதியாக விழாவின் கதாநாயகர் திரு. A. ரத்தினசாமி அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள். தான் பிறந்து வளர்ந்த இடம் குறித்து ஆரம்பித்து தான் பணியாற்றிய ஒவ்வொரு பள்ளிகளில் இருந்த நன்மைகளையும் அவருக்குக் கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஆசிரியர்கள் எங்கு சென்றாலும் இன்முகத்தோடும் மாணவர்களின் நலன் அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஒத்துழைப்பு தருவதும் ஆசிரியரின் பணி என்றும் குறிப்பிட்டார். மேலும் அயப்பாக்கம் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் நினைவுப் பரிசை வழங்கினார். மிகச் சிறப்பான ஏற்புரையாக திரு. ARS அவர்கள் ஆற்றினார்கள். விழாவின் இறுதியில் திரு. C. சாலமன் உதவித்தலைமை ஆசிரியர் நன்றி உரையை மிக விரிவாகவே எடுத்து கூறினார். இந்நிகழ்வில் 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தன்னுடைய அன்பினை திரு. ARS அவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.
நிகழ்வின் இறுதியில் திரு. A. ரத்தினசாமி
அவர்கள் அனைவருக்கும் விருந்து வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்தினார். இந்த நிகழ்வை
அயப்பாக்கம் பள்ளியின் பட்டதாரி உதவித்தலைமை ஆசிரியர் திரு. வெ. பாலமுருகன்
அவர்கள் தொகுத்து வழங்கினார்...
0 Response to "திரு. A. ரத்தினசாமி, கணித பட்டதாரி ஆசிரியர் அவர்களுக்குப் பணி நிறைவு பாராட்டு விழா 16.04.2023 "
Post a Comment