பணி நிறைவு பெற்ற ஆசிரியர் A.ரத்தினசாமி அவர்களைப் பற்றி வெ. பாலமுருகனின் உரை.....16.4.2023. 11. AM, அயப்பாக்கம்….

16.4.2023. அயப்பாக்கம்….
நம் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவித்
தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். திரு A. ரத்தினசாமி அவர்களுக்கு
இன்று பணி நிறைவு விழா நடைபெறுகின்றது.
A. ரத்தினசாமி ..... ரத்தினம்
போன்றவர் சாமி என்றால் தலைவர் என்றும் பொருள். ஆக ரத்தினம் போன்ற தலைவர் என்று
பொருள் வருகிறது. இது நண்பரின் வாழ்விலும் பிரதிபலித்துள்ளது. நான் பார்த்தவரையில் அனுபவத்தில் எனக்கு பெரிதாக
அனுபவம் எல்லாம் இல்லை. நம்ம எச். எம் ஏ.எச்.சம் மற்றும் ஆசிரியர் டி.சி,, பி.எச்.எப்.
எல்லாம் அதிகம் அனுபவம் வாய்ந்தவர்கள். 18 ஆண்டுகள்
மட்டுமே இதுவரை பணி அனுபவம் உள்ளவன் நான். ஆனால் இப்போது பணி செய்கின்ற நம் பள்ளி
ஒன்பதாவது பள்ளி.
அந்த வகையில்
நல்ல சமூக அக்கறையும் மாணவர்கள் மீது அக்கறையும் ஆசிரியர்கள் மீது அக்கறையும்
கொண்டவராக நம் ஏ.ஆர்.எஸ் சார் திகழ்கின்றார். ஏ.ஆர்.எஸ் அவர்களுடன் பணி செய்த
காலம் குறைவு. ஆனால் பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றிய நிறைவு எனக்கு இருக்கிறது.
பாடம் நடத்துவதில் மிகத் தேர்ந்தவர் நம்ம சார். சாருக்கு அரசுப் பணி கிடைக்கும்
முன்பே தனியார் பள்ளியில் பணிபுரிந்து இருக்கின்றார். அங்கேயும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள்
பெற கடுமையாக உழைத்து அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்துள்ளார்.
மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை, சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதில்
மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு இருக்கின்றார்.
அது அறிவைக்
கொடுப்பதாகட்டும் விலையில்லா பொருட்களைக் கொடுப்பதாகட்டும் தன்முனைப்புடன்
ஆர்வத்தோடு அதேசமயம் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதில் அதிக அக்கறை
கொண்டு செயல்பட்டு இருக்கின்றார். ஒன் மேன் ஆர்மி ஆக இருந்து மாணவர்களுக்கு
பொருட்களைக் கொடுத்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். அவருடைய பணத்தைப்
போட்டும் கூட மாணவர்களுக்கு அதிகமான எழுதுபொருட்கள், பாடநூல்கள், பாட நோட்டுகள்,
கணித உபகரண பெட்டி, ஏன் பென்சில், அழிப்பான் என்று வாங்கிக் கொடுத்திருப்பதை நாம்
கண்டிருக்கின்றோம். நேரம் காலம் கருதாது பணி புரிவதில் தேர்ந்தவர் நம் ஏ ஆர் எஸ். சார்.
எந்த ஒரு
வேலையாகட்டும் அதனை முடிப்பது வரை வேறு எதையும் செய்யாமல் கொடுத்த பணியைச் சிரம்மேல்
கொண்டு சிறப்பாக செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர் நம்ம சார். தேர்வு வந்தால்
வினாத்தாளை எடுத்து வர நம் ஆசிரியர் ஆர்.எஸ் சார் உதவி செய்வார். தேர்வு அறைகள்
ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு உரிய பணி ஒதுக்கீடு, மாணவர்களுக்குத் தேர்வு எண்
கொடுப்பது என அனைத்து பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதனைச் சிறப்பாக
முடித்தவர்தான் நம்ம ஏ.ஆர்.எஸ் சார்.
சென்ற ஆண்டுகூட
ஆசிரியர்களுக்கான கால அட்டவணையைத் தயார் செய்து கொடுத்தார். ஒரு சில பள்ளிகளில்
ஆசிரியர்கள் எண்ணிக்கை 10, 15 க்குள் தான்
இருக்கும். நம் பள்ளியிலோ ஆறு முதல் பத்து வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களின்
எண்ணிக்கை 27 மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 2 ஆக இந்த 29 பேருக்கும்
டைம்டேபிள் போட்டாக வேண்டும். ஏ.ஆர்.எஸ் சாரிடம் சொன்னவுடன் தயார் செய்து கொடுத்தார். அந்த ஒரே டைம்டேபிள்
தான் இந்த ஆண்டு முழுமைக்கும் வந்தது.
டைம்டேபிள்
போடும்போதுகூட யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில்
கவனத்தோடுதான் போட்டுக் கொடுத்தார். இரண்டு மாடி ஏறுவது யார் யாருக்கு சிரமம்
என்பதில் தொடங்கி, மாணவர்களின் நலன் கருதியும் அந்த டைம்டேபிளைச் செவ்வனே சிறப்பாக
கொடுத்தார்.
ஆண்டு
முழுமைக்கும் தேர்வுப்பணி மற்றும் ஆயத்த பணி எது சொன்னாலும் அதற்கு என்ன சார்,
செய்திடலாம் என்று சொல்லி அப்பணிகளைச் சிறப்பாக செய்வதுதான் அவரது இயல்பு. எதைச்
சொன்னாலும் முடியும் என்றுதான் சொல்வாரே தவிர முடியாது என்று ஒருபோதும்
கூறியதில்லை.
சாருடன்
நிறைய பேசி இருக்கின்றோம். அவற்றிற்கு எல்லாம் பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் எதை
எப்படி செய்யலாம் என்று சொல்கின்ற அவருடைய அனுபவம் எனக்கெல்லாம் நல்ல பாடமாக
அமைந்திருக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுடைய டாப்சீட் மற்றும் விடைத்தாள் சி.இ.ஓ.ஆபீசிலிருந்து
வாங்கி வர வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் போறீங்களா என்று
கூட நான் கேட்கவில்லை. ஆனால் சார் தன்னுடைய சொந்த காரை எடுத்துக்கொண்டு ஆர்.எஸ் சாருடன்
சென்று பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள்களையும் டாப்சீட்டையும் வாங்கி வந்தார்.
உண்மையிலேயே
ஏ.ஆர்.எஸ் செய்கின்ற பணிகளை எல்லாம் பார்த்தாலும் சரி அவரது தோற்றத்தைப்
பார்த்தாலும் சரி வியப்பாகவே இருக்கும். அந்த அளவு சுறுசுறுப்பு, ஆர்வம், ஈடுபாடு,
உழைப்பு என்று அனைத்திலும் முத்திரையை பதித்தவராகவே இருக்கின்றார். இன்னும் இரண்டு
அல்லது ஐந்து ஆண்டு பணி கொடுத்தாலும் கூட அதே ஈடுபாட்டோடு தான் அவர் செய்வார்
என்பது வெள்ளிடைமலை.
அவரது நேர்மை,
உழைப்பு, பழகும் தன்மை, முயற்சி, அன்பு என எல்லாவற்றிலும் உயரத்தில் இருக்கின்றார்
நம் ஏ.ஆர்.எஸ் சார். உண்மையிலேயே அவரது ஓய்வு மாணவர்களுக்கும் எங்களுக்கும் ஈடு
செய்ய முடியாத இழப்புதான். யாராலும் அவரது இடத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்றுதான்
நான் நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.எஸ் பள்ளியை விட்டு செல்வது அதாவது ஓய்வு
பெறுவது பெரிய இழப்பு தான். காலம் தான் பதில் சொல்லும்.
சாருடன் பணி
செய்த இந்த ஒரு ஆண்டு, வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக தான் இருக்கும். அவை
நல்ல நினைவுகளாகவே இருக்கும். ஓய்வு பெறும் சார் இனி, தன் உடல் நலத்திலும் தன்
துணைவியார் மீது இன்னும் அதிகமாக அன்பு செலுத்த கிடைத்த வாய்ப்பாகவே இனிவரும்
காலங்கள் அமையும். காலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு வர வேண்டிய சூழல்
இருக்காது. ஆனாலும் நீங்க சீக்கிரம் எழுந்து விடுவீர்கள். ஏனெனில் அது உங்களது
வாழ்நாள் பழக்கம். திடீரென மாற்ற இயலாது. உங்கள் இணையரை அழைத்துக்கொண்டு நிறைய
பயணங்கள் செய்யுங்கள். பேரக்குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க இனி காலம்
உங்களுக்கு இனிக்கும்.
நம் பள்ளித்
தலைமை ஆசிரியர் நேரம் காலம் கருதாது பணி செய்பவர். ஐயாவிற்கு அவரது மேலதிகாரிகள்
அனுப்பும் தகவல்களை உடனே எனக்கும் ஆசிரியர்களுக்கும் அனுப்புவார். இரவில் கூட
அய்யாவின் வாட்ஸ்அப் பேசிக் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு சுறுசுறுப்பு,
எதையும் முன்கூட்டியே செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். நம் பள்ளியின்
பெயர் மேலும் மேலும் நல்ல பெயர் எடுக்கவே பாடுபட்டு கொண்டு வருகின்றார்.
அப்படித்தான்
மார்ச் மாதம் 1ஆம் தேதி என்னிடம் மார்ச் 31-ஆம்
தேதிக்குள் என் மேசைக்கு 2023 - 24 அதாவது
அடுத்த கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் டைம்டேபிள் வந்துவிட வேண்டும் என்றார். எச்.எம்
சொல்லிட்டார் உடனே செய்தாக வேண்டும். மீண்டும் ஏ.ஆர்.எஸ் அவரிடம் சொன்னேன். நம்ம
எச்.எம் திரும்ப நம்மகிட்ட கேட்பதற்குள் டைம்டேபிள் தயார் செய்தும் முடித்துக்
கொடுத்துவிடலாம் என்றேன். முதலில் சார் தயக்கம் காட்டினார். பிறகு நம்ம டி.சி
டீச்சர் சொன்னாங்க.. அவங்க ஒரே வார்த்தை தான் சொன்னாங்க. ஏ.ஆர்.எஸ் சார் நீங்க இந்த
வருஷம் டைம்டேபிள் போட்டு கொடுத்தீங்க,, அதிலேயே தான் இந்த ஆண்டு முழுமையும்
முடிச்சோம்.
நீங்க போட்டா
உங்க கைராசி நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அப்ப தேதி 20 ஆகிவிட்டது.
இன்னும் பத்து நாள்தான் இருக்கு, என்ன சார்
செய்து விட முடியுமா என்று நான் கேட்டதற்கு,, எல்லாம் முடியும் என்றார். 21ஆம் தேதி
முதல் தொடங்கி 30ஆம் தேதி வரை கடுமையாகப் பணி
செய்து டைம்டேபிளைத் தயார் செய்து கொடுத்தார். இப்பணியை அவரது துணைவியாரின்
உதவியால் சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கின்றார். இறுதிக்கட்ட பணியில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்ட நம் ஆர்.எஸ் சார் தட்டச்சு செய்து கொடுக்க சரியாக 31ஆம் தேதி... வரும்
கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்களின் கால அட்டவணை நம் தலைமை ஆசிரியர் அய்யாவுக்கு
கொடுக்க தயாராகியது.
இப்படி தான்
எடுத்துக் கொண்ட பணியில் முழு ஈடுபாடு செலுத்தியவர் தான் ஏ.ஆர்.எஸ் சார். அதாவது
எல்லா வேலைகளிலும் 100% உழைப்பைக் கொடுப்பார். இரவு பகல்
பாராது இப்படி பணி செய்பவர்களைக் காண்பது அரிதிலும் அரிது. மிக்க நன்றி சார். தான்
கொண்ட கொள்கையில் எப்போதும் மாறாது நேர்மையாக உழைப்பதில் யு ஆர் கிரேட் சார்.
சாருக்கு நாங்கள் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. இருப்பினும் நன்றி என்று
சொல்வதைவிட வேறென்ன சிறந்ததாக இருந்து விடப்போகிறது. ரொம்ப நன்றி சார். ரியலி ஐ
மிஸ் யூ சார்.
ஏ.ஆர்.எஸ் சாரின்
துணைவியார் கூட நினைத்திருப்பார் பள்ளியில்தான் வேலை செய்கின்றார் வீட்டுக்கு வந்துமா
என்று நினைத்திருப்பார். அவ்வாறு உங்களுக்கு நான் இடையூறு கொடுத்திருப்பேன். அதனையும்
பொறுத்துக் கொண்டு சாரின் அனைத்து பணிகளிலும் பங்கு கொண்டு அன்பை வெளிப்படுத்தி
வரும் உங்களுக்கு எம் நன்றி. இனிவரும் காலங்களும் இருவரின் வாழ்வில் நலமும் வளமும்
அன்பும் பெருகி வழிந்திட வாழ்த்தி மகிழ்ந்து இடம் சார்கிறேன். வாய்ப்பிற்கு நன்றி.
0 Response to "பணி நிறைவு பெற்ற ஆசிரியர் A.ரத்தினசாமி அவர்களைப் பற்றி வெ. பாலமுருகனின் உரை.....16.4.2023. 11. AM, அயப்பாக்கம்…."
Post a Comment