12.6.2023 திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு
ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த ஆண்டுக்கான கல்வி தொடக்க நாள் இன்று இனிதே துவங்கியது.
ஊராட்சி மன்றத் தலைவர் திரு அ.ம. துரை வீரமணி அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு
கொடுத்து வரவேற்றார். அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரைகளையும் கூறி இன்முகத்தோடு பள்ளிக்கு
வருமாறும் நன்றாக படிக்குமாறும் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுமாறும் கூறினார்.
பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
இதனையும் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இன்று பள்ளியில் சேர வந்திருந்த மாணவர்களுக்கு
விண்ணப்பங்களை வழங்கி மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தினார். மேலும் அவர்களுக்கு
வாழ்த்துகளையும் கூறினார். ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் வந்திருந்து மாணவர்களிடடம்
உரையாடியது மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அவரது
வருகை பள்ளிக்கு எப்போதும் தேவைப்படுகின்றது. அவரது தீவிரமான இத்தகைய பணிகளின் செயல்பாடுகள்
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் சத்துணவு கூடத்தைப்
பார்வையிட்டு சத்துணவு கூடத்தில் இருக்கின்ற நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டினார். மேலும்
இவற்றைச் சரிசெய்யவதற்குத் தேவையானவற்றைத்
தான் செய்வதாகவும் தலைவர் அவர்கள் உறுதி அளித்தார்கள். பள்ளியைப் பார்வையிட்டு பள்ளிக்குத்
தேவையானவற்றை செய்து தருவேன் என்று உறுதியளித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்களை வழங்கி
பாடநூல்கள் கொடுக்கும் பணியை இனிதே தனது கரங்களால் துவக்கி வைத்தார். பள்ளி வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருப்பேன் என்பதைத் தன் செயல்பாட்டில் எடுத்துக் காட்டினார். தலைவர் அவர்களின்
வருகையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து இப்படியான தலைவரின் செயல்பாடுகள் மிகுந்த
பயனைத் தருவதாக உள்ளது. சமூக நலன் சார்ந்து ஈடுபடும் தலைவர் அவர்களுக்கு நன்றியைத்
தெரிவிப்பதில் அயப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்
மற்றும் அலுவலக பணியாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் சி. கருணாகரன் அவர்கள் சென்ற கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% கொடுத்த ஆசிரியர்களைப் பாராட்டியும் மற்றும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார்கள். அதேபோல தங்களது பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களுக்கும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அவர்கள் பாராட்டியும் மற்றும் பொன்னாடை போர்த்தியும் சிறப்பித்தார்கள். மேலும் தலைமை ஆசிரியருக்கு உறுதுணையாக இருக்கின்ற பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் மூவருக்கும் தலைமை ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்கள்.
ஆசிரியர்களை அன்போடு அரவணைத்து செல்லும் தலைமை ஆசிரியர் அவர்களின் பாங்கு அனைத்து ஆசிரியர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. தலைமையாசிரியர் பேசும்போது இந்த ஆண்டும் அதிகப்படியான தேர்ச்சிவிழுக்காட்டை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். குறிப்பாக இந்த ஆண்டு பொதுத்தேர்வில் சுற்று வட்டாரத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி சதவீதத்தில் அயப்பாக்கம் பள்ளி முன்னிலையில் இருக்கிறது என்று பெருமையோடு கூறி ஆசிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். இத்தகைய நிலைப்பாடானது மேலும் வளரட்டும் என்ற வகையில் தலைமை ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் உதவித் தலைமை ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்க இறைவணக்கக் கூட்டம் இனிதே நிறைவுற்றது...
0 Response to "திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - கல்வி ஆண்டு முதல் நாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணவர்களுக்கு இனிப்புக் கொடுத்து வரவேற்றல்- 100 % தேர்ச்சிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியரின் பாராட்டுரையும் பொன்னாடையும் "
Post a Comment