22.6.2023 மாநில திட்ட இயக்கக இணை இயக்குநர் திருமதி. உமா அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து கற்போம் திட்டம் ஆய்வு, மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.



திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து கற்போம் திட்டத்தின்கீழ் 2023 ஆம் ஆண்டு இறுதித்
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
22. 6.2023, இன்று மாநில திட்ட இயக்கக இணை இயக்குநர் திருமதி. உமா அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து இப்பயிற்சியை மேற்பார்வையிட்டார்கள். அம்மா அவர்களுடன் திருவள்ளூர் மாவட்ட RMSA ADPC மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் திரு . தனசேகரன் அவர்களும் வந்திருந்தனர். மாணவர்களிடம் எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று அறிவுரை கூறினார். ஆசிரியர்களுக்கும் தக்க ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் கூறினார்கள்.
மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து பயன்பெறுமாறு எடுத்துரைத்தார். நடைபெற உள்ள துணைத்தேர்வில் பங்கேற்று அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற தன்னுடைய சிறந்த கருத்துகளையும் வழிமுறைகளையும் கூறியது மாணவர்களுக்கு உற்சாகமளித்ததாக இருந்தது.


இணை இயக்குனர் அவர்களின் ஆலோசனைப் படி ஆசிரியர்கள்
செயல்படுவோம் என்று உறுதி அளித்தனர். பள்ளியின் தேர்ச்சி சதவீதம் குறித்து
கேட்டு அறிந்தார். மேலும் இந்தக் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் இன்னும்
அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் கூறினார்.
மாணவர்களிடம் தேர்வு எழுதும் முறைகளையும் கூறி நன்கு படித்து விடையளித்து வெற்றி
பெற வாழ்த்துகளையும் கூறினார். பள்ளியில் நடைபெறும் பல்வேறு பணிகளைப் பார்வையிட்டு
தகுந்த அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் இணை இயக்குனர் அம்மா அவர்கள் கூறினார்.
ஆசிரியர்களிடம் பேசும்போது மாணவர்களுக்குரிய
பிரச்சினைகளை நன்கு அறிந்து அவர்கள் இன்னும் நன்கு பயன்பெற வழிகாட்டுதலையும்
பாடங்களையும் போதிக்கின்ற முறைகளையும் கூறினார். தன்னிடம் வரும் மாணவர்கள்
அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உறுதிமொழியை ஆசிரியர் எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று தன் கருத்தை வெளிப்படுத்தினார்கள். பள்ளியின் நலம் சார்ந்து
பல்வேறு கருத்துகளைத் தலைமை ஆசிரியரிடம் பரிமாறிக் கொண்டார். அவரது வருகையால்
மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமடைந்தனர்.
0 Response to "22.6.2023 மாநில திட்ட இயக்கக இணை இயக்குநர் திருமதி. உமா அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து கற்போம் திட்டம் ஆய்வு, மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்."
Post a Comment