23.06.2023, திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 2023-24-ஆம் கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம்.



அனைவருக்கும்
வணக்கம்....
திருவள்ளூர்
மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் - 2023-24-ஆம்
கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம் இன்று 23.06.2023
வெள்ளிக்கிழமை பிற்பகல் 03:00 மணிமுதல் 04:00 மணிவரை பள்ளியின் தலைமை ஆசிரியர்
திரு. C. கருணாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முதன்மைக்
கல்வி அலுவலர், திருவள்ளூர் மாவட்டம் அவர்களின் செயல்முறை மற்றும் அவரது
வழிகாட்டுதல் படி இப்பள்ளியில் கூட்டமானது நடைபெற்றது.
அ)கூட்டத்தில்
விவாதித்த கூட்டப் பொருள்கள் (Meeting Agendas)
I.
பள்ளிச்சேர்க்கை:
1) இப்
பள்ளியில், சேர்க்கப்பட வேண்டிய மாணவர்கள் (To be Admitted) விவரங்கள்பெற்றோர்
செயலியில் காண்பிக்கப்பட்டது. அம்மாணவர் மற்றும் பெற்றோரை பள்ளி மேலாண்மைக்
குழுஉறுப்பினர்கள் சந்தித்து மாணவரைப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
அதன்
விவரங்கள் பெற்றோர் செயலியில் உறுப்பினர்கள் பதிவு செய்வதைப் பள்ளித் தலைமை
ஆசிரியர் உறுதி செய்தார்.
2)
10ஆம்வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் அவர் தம்
பெற்றோரைப் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாணவர் படிப்பைத்
தொடரவும் அல்லது வேலை வாய்ப்புகள் சார்ந்தப் படிப்புகளை அரசின் தொழிற் கல்வி
நிறுவனங்களில் (ITI) சேர்ந்து படிக்கவும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது . படிப்பைத் தொடர விருப்பமில்லா மாணவர்கள் கூறும் காரணங்களை
அறிந்து தகுந்த வழிகாட்டுதல்களைப் பள்ளி மேலாண்மைக்குழு வழங்கிட முன்வந்தனர்.
II. சிறந்த
பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு விருது வழங்கப்படும் என்ற தகவல் கூட்டத்தில்
பகிர்ந்து கொள்ளப்பட்டது.
3) மாவட்ட
அளவில் அனைத்து வகையிலும் சிறப்பாகச் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு 2023
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்டஆட்சியர் அவர்களால் ”சிறந்த
பள்ளிமேலாண்மைக் குழு” விருது வழங்கிப் பாராட்டுச் சான்று வழங்கப்படும் என்ற தகவல்
கூட்டத்தில் கூறப்படுகிறது..
III.
மாணவர்களின் வகுப்புமாற்றம் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
வகுப்பு நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டது.
4)10ஆம்வகுப்பு(உயர்நிலைப்மற்றும்மேல்நிலைப்
பள்ளிகளில்), 11-ஆம்வகுப்பு (மேல்நிலைப்பள்ளிகளில்) பயின்று நிறைவு செய்த
மாணவர்கள் அனைவரும் அடுத்தவகுப்பில் சேர்ந்து பள்ளியில் தொடர்வதை உறுதி
செய்யப்பட்டது.
5) உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்: துணைத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் (10,
11 மற்றும் 12ஆம்வகுப்புகள்) பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை
உறுதிசெய்யவும், மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கவும். பள்ளி மேலாண்மைக்குழு
உறுப்பினர்கள் தமது சிறப்பான ஆதரவு வழங்கிடக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
IV.
சிறப்புத் தேவைகளுடையக் குழந்தைகள்/மாற்றுத்திறனாளிக்குழந்தைகள்:
6)
பள்ளியருகே குடியிருப்புப் பகுதிகளில் மாற்றுத்திறன் குழந்தைகள் எவரேனும்
பள்ளியில் சேராமல் உள்ளார்களா என்று பார்வையிட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்
முடிவெடுத்தனர். அக்குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களைப் பள்ளியில்
சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உரையாடல் செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் அவர்கள்
அனைத்திற்கும் தன் கருத்தையேம் பகிர்ந்து கொண்டார்.
V.
உயர்கல்விவழிகாட்டிகுழு:
7) ”நான்முதல்வன்”
திட்டத்தின்கீழ்
(i)
கல்லூரியில் சேரவிண்ணப்பித்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,
(ii)
மறுதேர்வுக்கு விண்ணப்பித்தத் தேர்ச்சிபெறாத (10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு)
மாணவர்கள்,
(iii)
தேர்ச்சி அடைந்தும் உயர்கல்விக்குச் செல்லாத மாணவர்கள் விவரங்களை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டத..
VI.
இல்லம்தேடிக்கல்வி:
8)
மாணவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்திற்குச்
சென்றுகற்றல் செயல்பாடுகளில் பங்கேற்பதின் அ வசியம் குறித்துக் கூட்டத்தில்
ஆலோசிக்கப்பட்டது. குழந்தைகள் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்வதை
உறுதி செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என் இவ்வாறு
பள்ளி நலன் சார்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....உதவித்
தலைமை ஆசிரியர் திரு. சாலமன் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது..
0 Response to "23.06.2023, திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 2023-24-ஆம் கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டம்."
Post a Comment