ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்... கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவதா?... அன்று CRC கூட்டத்திற்கு செல்வதா?.

Trending

Breaking News
Loading...

ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்... கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவதா?... அன்று CRC கூட்டத்திற்கு செல்வதா?.

ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்... கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவதா?... அன்று CRC கூட்டத்திற்கு செல்வதா?.

 


 


AIFETO..29.06.2023 கடிதம்...

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்: 36/2001

 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்...

 

 பள்ளிக்கல்வி ஆணையர் பதவி இருந்த காலத்திலும், பள்ளிக்கல்வி ஆணையர் பதவி விடுவிக்கப்பட்டதற்குப் பிறகும் மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (SCERT) பள்ளிக் கல்வித்துறையின்  மீது தொடர்ந்து அதிருப்தியினை ஏற்படுத்தும் அளவிற்கு மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  இயக்ககத்தின் (SCERT) செயல்பாடுகள் அமைந்து வருகிறது.

 

 தலைவர் கலைஞர் அவர்களின் அரசு வெளியிட்ட அரசாணைக்கிணங்க ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர்  பிறந்த நாளினை கல்வி எழுச்சி நாளாக பள்ளிகள் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரின் சார்பில் 4,5 வகுப்புகளுக்கு குறுவளமைய கூட்ட பயிற்சி (CRC) கூட்டத்தினை ஜூலை 15ஆம் தேதி நடைபெற இருப்பதாக முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். ஜூலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் என்று இயக்ககத்தின் நினைவுக்கு வரவில்லையா?...

 

எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தை நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு பிடிவாதமாக அமல்படுத்தி இருப்பதன் மூலம் பெற்றோர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. பாடப் புத்தகம் இல்லாத கல்விமுறை வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

 

அதேபோல் குருவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சி கூட்டத்தினை CPD கூட்டமாக நடத்தி புதிய கல்விக் கொள்கையை  அமல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

 

தொடர்ந்து விமர்சனத்திற்கு உட்பட்ட இயக்கமாக மாணவர்களின் கல்வி நலனை பாதிக்க கூடிய வகையில் பள்ளிகளில் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களுடைய கருத்தினை கேட்டு பதிவு செய்யாமல் இவர்களுடன் இருக்கின்ற ஒரு குழுவினரை மட்டும் வைத்து கொள்கை அளவில் முடிவு எடுப்பதாலும்  விளம்பரத்தின் மூலம் திட்டத்திற்கு அமோக ஆதரவு இருப்பது போல் பறைசாற்றுவதும் நடைமுறையில்  இருந்து வருகிறது.

 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை கண்காணித்து நெறிப்படுத்துமாறு பெற்ற அனுபவங்களின் மூலம் வேண்டுகோளாக முன் வைக்கிறோம்.

 

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

 

 

0 Response to "ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்... கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவதா?... அன்று CRC கூட்டத்திற்கு செல்வதா?."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel