திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி MLA, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் - புதிய கட்டடத் திறப்பு விழா - ஊராட்சி மன்றத் தலைவர் திரு அ.ம. துரை வீரமணி


30.06.2023, அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டடத் திறப்பு விழா இனிதே நடைபெற்றது.. விழாவில் மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி MLA , மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு பள்ளியின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்கள். விழாவிற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக நின்றிருந்து பள்ளியின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு C. கருணாகரன் அவர்கள் வரவேற்பு நிகழ்த்தினார்.
பள்ளியின் வளர்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திரு. அ.ம. துரை வீரமணி அவர்கள் சிறப்பாக செயல்படும் விதத்தைத் தன்னுடைய அழகான, சிறப்பான பேச்சின் மூலம் தலைமை ஆசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார். விழாவிற்குத் தலைமை வகித்து தான் எப்படிபட்ட சமூக பொறுப்புள்ளவர் என்பதை ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள் மீண்டும் நிரூபித்தார். காரம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கணபதி அவர்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு தாங்கள் என்றும் துணையாக இருப்போம் என்று குறிப்பிட்டார். மேலும் புதிய கட்டிடத்தைத் திறப்பது மட்டுமில்லாமல் பள்ளியின் வளர்ச்சிக்காக தன்னுடைய சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்த ஆண்டு ரூபாய் 55 லட்சம் பணத்தில் பள்ளிக்கு மேலும் புதிய வகுப்பறை கட்ட சம்மதம் தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார்.
தொடர்ந்து அரசுப் பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவதற்கு காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி பேசினார். விழாவில் மாணவர்கள் அமைதியாக இருந்து நிகழ்வை கண்டுகளித்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அவரவர்கள்
தங்களது சிறப்பான பணியைச் செய்தார்கள். MMM , செவிலியர் கல்லூரி
மற்றும் அயப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு
செய்யப்பட்டது. கட்டடத் திறப்பு விழாவிற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்
அவர்கள் மருத்துவமுகாமைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில் மாணவர்களும்
ஆசிரியர்களும் பொதுமக்களும் என்று பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்நிகழ்வு
இனிதே பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மீண்டும்
இக்கல்வி ஆண்டிலும் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை
எடுக்குமாறு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கூறினார். இந்த நிகழ்வை பள்ளியின்
தமிழாசிரியர் திருமதி சரளா தேவி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
GOVERNMENT
BOYS HIGHER SECONDRY SCHOOL, AYYAPAKKAM, திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்
மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மற்றும்
MMM செவிலியர் கல்லூரி (N.S.S.UNIT) இணைந்து நம்ம, ஊரு சூப்பரு ஊரு திட்டத்தின்
மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.
நாள்:
30.06.2023 வெள்ளிக்கிழமை நேம் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை இடம் : TNHB
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மருத்துவ
முகாம் ஏற்பாடு - அ.ம.துரைவீரமணி - தலைவர் / செயல் அலுவலர், அயப்பாக்கம்
முதல்நிலை ஊராட்சி.
மருத்துவ
முகாமை துவக்கி வைப்பவர் - மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி MLA
அவர்கள் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்.
மருத்துவர்
ஆல்பி ஜான் வர்கிஸ் IAS அவர்கள், மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டம்.
திரு.C.A.ரிஷப்
IAS அவர்கள்
கூடுதல்
ஆட்சியர் (வளர்ச்சி)திருவள்ளூர் மாவட்டம்.
S.ரூபேஷ்குமார்,
உதவி இயக்குநர் , (ஊராட்சிகள்) திருவள்ளூர் மாவட்டம்.
திருமதி
S.மம்மு , திரு. M.பாஸ்கரன் , வட்டார வளர்ச்சி அலுவலர், பா.கிரிஜா ,
ஒன்றியக்குழுத் தலைவர், இரா.வினோத், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், S.பழனி, மண்டல
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
திரு
A.M.யுவராஜா ஊராட்சி மன்றத் தலைவர், மற்றும் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற
உறுப்பினர்கள்
அந்தோணி
தியாகராஜன், M.லீமா, V.கவிதா, A.செல்வகுமார், K.S.மாறன்
குமார் , K.உமா மகேஸ்வரி, A.P.பாபு, P.கரன்சிங், D.பத்மாவதி,
V.திலகவதி, G.சண்முகம், S.ஹேமலதா, A.பிரபாவதி, G.ஸ்ரீதர்
பொதுமக்கள்
அனைவரும் இலவச மருத்துவ முகாமில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
K.உமா
5வது வார்டு உறுப்பினர்.
0 Response to "திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாண்புமிகு காரம்பாக்கம் க.கணபதி MLA, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் - புதிய கட்டடத் திறப்பு விழா - ஊராட்சி மன்றத் தலைவர் திரு அ.ம. துரை வீரமணி "
Post a Comment