28.7.2023 திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளில் புதிய பள்ளிக் கட்டடம், சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

Trending

Breaking News
Loading...

28.7.2023 திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளில் புதிய பள்ளிக் கட்டடம், சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

28.7.2023 திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளில் புதிய பள்ளிக் கட்டடம், சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

 





வில்லிவாக்கம் ஒன்றியம் - அயப்பாக்கம் ஊராட்சியில் மன்றத் தலைவர் அ.ம.துரைவீரமணி அவர்களின் சீரிய முயற்சியில் அயப்பாக்கம் ஊராட்சி பல நன்மைகளைப் பெற்று வருகின்றது. அவ்வகையில் 28.7.2023 அன்று அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் - சாலை விரிவாக்கப் பணிகள்! அரசு மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மூன்று புதிய வகுப்பறை 54 லட்சம் மதிப்பிட்டிலான கட்டிடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் திறந்து வைத்தார். 


முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப் படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

 








2022- 2023 ஆம் ஆண்டு அயப்பாக்கம் ஊராட்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் வழங்கினார். ஊராட்சியில் மன்றத் தலைவர் அ.ம.துரைவீரமணி அவர்கள் அவர்கள் ஏற்பாட்டில் முறையே 10000, 7000, 5000 பணம், சான்றிதழ்  மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. பிறகு பொதுத்தேர்வில் 100 சதவீதம் கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அரசு மேல்நிலை ஆண்கள் தலைமை ஆசிரியர் சி. கருணாகரன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா மற்றும் பிற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், டி.என்.எச்.பி., பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார்.  நேற்று (28.7.2023), திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில், கோடி மதிப்பீட்டில், டி.என்.எச்.பி., பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரி வாக்கப் பணியை, பொதுப் ஆகும். பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார்.

 










27.08.2021 அன்று சட்டப் பேரவையில், "10,000கி.மீ நீள ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி சாலைகள் படிப்படியாக, மாவட்ட இதரச் சாலைகளாக, தரம் உயர்த்தப்படும். முதற்கட்ட மாக சுமார் 2000 கி.மீ. நீளச் சாலைகள், நடப்பாண்டில் தரம் உயர்த்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

 

முதற்கட்டமாக, 2000 கி.மீ. நீளமுள்ள 873 ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலை களை, ரூ.2,178 கோடி மதிப் பீட்டில், தரம் உயர்த்த, 18.11.2022ல் அரசாணை வெளியிடப்பட்டது.

 

தற்போது, திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றி யம், அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையின் மொத்த நீளம் 2.80 கி.மீ ஆகும். இச்சாலையானது, திருவேற்காடு அம்பத்தூர் சாலையில் துவங்கி, ஆவடி மாநகர சாலையின் வழியாக, தேசிய நெடுஞ்சாலை 205ல் இணைகிறது. இச்சாலையை, இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தி, 800 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலையாக மேம்படுத்தப்படஉள்ளது.

 




மேலும், மழைநீர் கடந்து செல்லும் வகையில், மூன்று இடங்களில் சிறுபாலங்களும் அமைக்கப்படுகிறது. இச்சாலையை தரம் உயர்த்துவதன் மூலம், அன்னனூர் சாலைகளை, இரயில்வே நிலையம் மற்றும் இதர திருமுல்லைவாயல் இரயில் நிலையங்களுக்குச் செல்லும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கடலோர காவல் படை குடியிருப்பு, ஒன்றிய அரசின் போதைப்பொருள் கட்டுப் பாட்டுத்துறை அலுவலகம், தேசிய பரவு நோயியல் நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்) ஆகிய அவர்கள் தெரிவித்தார்கள். பகுதிகள் பயன் பெறும். தமிழ்நாட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை, அரசு சாலைகளாக தரம் உயர்த்தி, கிராமச்சாலைகள் திட்டத்தினை, 1.7.1972இல் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்தார். கலந்து கொண்டனர்.

 

மக்கள் தொகை 1500க்கும்மேல் உள்ள 3,902 கிராமங்களையும், மக்கள் தொகை 1000க்கும்மேல் உள்ள 2,943 கிராமங்களையும், தார் சாலையாக தரம் உயர்த்தி, அரசு சாலைக ளாக மாற்றியமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஊராட்சி ஒன் றிய கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சாலையாக தரம் உயர்த்திட ஆணையிட் டார். இந்த ஆணையின் விளைவாகவே, தற்போது அயப்பாக்கம் ஊராட்சிக் குட்பட்ட, இச்சாலை நெடுஞ்சாலைத்துறை மூலம் மேம்படுத்தப்படுகி றது என்று, பொதுப்பணி கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.

 

அரசு மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் வாசித்தல், பாடல், நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கறிஞர் மதிவதினி அவர்கள் தன்னம்பிக்கை சார்ந்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 


இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள், தலைமைப் பொறியாளர் எம்.முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் திருவள்ளூர் மாவட்ட  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட துணை ஆட்சியர் சுகபுத்திரா முதன்மைக் கல்வி அலுவலர் கோ. சரஸ்வதி ஒன்றிய குழு தலைவர் கிரிஜா துணைத் தலைவர் ஜே.ஞானப் பிரகாசம், ஒன்றிய குழு உறுப்பினர், வினோத், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், துணைத் தலைவர் யுவராசா வார்டு உறுப்பினர்கள் அந்தோணி தியாகராஜன், லீமா, கவிதா, செல்வகுமார், உமா, உமாம கேஸ்வரி, பாபு, கரன்சிங், பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.மம்மு எம்.பாஸ்கரன், ஊராட்சிச் செயலர் கோ.ஸ்ரீதர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 


நிகழ்வின் இறுதியில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் நன்றியுரை ஆற்ற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

 

0 Response to "28.7.2023 திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளில் புதிய பள்ளிக் கட்டடம், சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel