ஆங்கில மன்றத் தொடக்க விழா - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்

Trending

Breaking News
Loading...

ஆங்கில மன்றத் தொடக்க விழா - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்

ஆங்கில மன்றத் தொடக்க விழா - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்

 


18‌.8.2023 அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் இப்பள்ளியில் ஆங்கில மன்றத் தொடக்க விழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் மாநிலக் கல்லூரியின் ஆங்கில உதவிப் பேராசிரியர்  திரு வி.ஆர். பிரசன்னகுமார்
 (Mr. V. R. PRASANNAKUMAR, M.A. M.Phil(Ph.D.)Assistant Professor in English Presidency College-Chennai -5) அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். முன்னதாக இம்மன்றம் தொடங்குவதற்கான நிகழ்வில் தலைமை ஆசிரியர்  திரு. சி. கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.  விழாவின் வரவேற்புரையை தலைமை ஆசிரியர் நன்றாக வழங்கினார். 

 

கணித முதுகலை ஆசிரியர் திரு. ஜானகிராமன் அவர்கள் சிறப்பு விருந்தினரைக் குறித்து  மாணவர்களுக்கு நன்கு அறிமுகம் செய்தார். ஆங்கில ஆசிரியர்கள்  English Teachers , Mrs. L. Susela. Mrs. R. Sujitha Mary, Mrs Annie Benson, Mrs. G.Dilli Rani, & Mrs. Gomathi ஐவரும் தங்களுடைய பங்களிப்பைச் செய்தனர். உயர்நிலை உதவித் தலைமை ஆசிரியர் திரு‌. வெ. பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டார். மேலும் பள்ளியில் உள்ள சில ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர் பேசிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு பயன்பெற்றனர்.











 

சிறப்பு விருந்தினர் அவர்கள் பேசும்போது மொழி என்பது என்ன என்று விரிவாக விளக்கம் செய்தார்.  மொழித் திறன்கள் என்னவென்று பட்டியலிட்டு அவற்றை ஒவ்வொன்றாக தன்னுடைய இயல்பான பேச்சின் மூலம் விளக்கிச் சென்றார். படித்தல், கேட்டல், எழுதல், பேசல் என்ற பொருண்மையில் இவரது பேச்சானது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாக கொண்ட நாடுகள் எவையெவை என்று மாணவர்களிடையே கலந்துரையாடல் முறையில் தனது கருத்தை வெளிப்படுத்தினார். ஆங்கிலத்தைத் தாய்மொழியாக கொண்ட 10 நாடுகளின் பட்டியலையும் சிறப்பு விருந்தினர் எடுத்துரைத்தார்.

 

ஆங்கில அகராதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் மாணவர்களிடம் தம் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, கிரின்லாந்து, கலிபோர்னியா என்று குறிப்பிட்டு அங்கே பேசுகின்ற ஆங்கிலத்தைக் குறித்தும் தாய்மொழியைக் குறித்தும் அம்மொழியில் உள்ள இலக்கிய இலக்கணம் குறித்தும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். மொழியின் பயன் என்னவென்று கூறி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மொழியைப் படிப்பதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். ஒலியியல்,  மொழியியல் என்ற தலைப்பிலும்  தன்னுடைய பேச்சின் சுவாரசியத்தை இறுதியில் பகிர்ந்து கொண்டார்.

 








ஆங்கிலம் குறித்த மிகச் சிறப்பான ஒரு சொற்பொழிவைச் சிறப்பு விருந்தினர் திரு வி. ஆர். பிரசன்னகுமார் ஆற்றினார்.   மாணவர்கள் தங்களுடைய பங்களிப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். Parts of speech   சொற்களை  அட்டைகளில் எழுதி வந்து ஒவ்வொன்றையும் விளக்கினார்கள்.    Tongue twister குறித்தும் மாணவர்கள் பேசினார்கள்.           Mime  (உரையாடல் அற்ற நாடகப் பாங்கு) போதைப் பொருள் விழிப்புணர்வு சார்ந்து மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வழங்கினார்கள். 








ஆங்கிலத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களும்  பேசினார்கள். ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் திருமதி ஆனிபென்சன் இந்நிகழ்வைச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.  நிகழ்வு சிறக்க சிறப்பாக பணிசெய்த ஆசிரியர் Mrs. G. Dilli Rani அவர்களின் செயல் பாராட்டுதற்கு உரியது.  ஆங்கில பட்டதாரி ஆசிரியர் லூ.சுசிலா அவர்கள் நன்றியுரை கூறினார். இறுதியில் இந்நிகழ்வு  தேசியகீதத்தோடு  சிறப்பாக நிறைவுற்றது.



 


0 Response to "ஆங்கில மன்றத் தொடக்க விழா - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel