"நல்ஆள் பிறக்கும் குடி "
இந்தக் குடியில் பிறந்தவர்கள் நல்லோர், இந்தக் குடியில் பிறந்தவர்கள் தீயோர் என்று
எப்போதும் எண்ணி விடாதீர்கள்.
எக்குடியிலும் நல்லோர் பிறப்பர். இக்குடியில்தான் நல்லோர் பிறப்பர் என்று இயற்கை ஒருபோதும் வரையறை செய்து
வைக்கவில்லை.
" கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும்
அறிவார்யார்
நல்ஆள் பிறக்கும் குடி. ( நான்மணிக்கடிகை - 04)
1. கள்ளிச்செடி ஒரு முள் செடியாகும். இதன் அருகே செல்ல
அனைவரும் அஞ்சுவர். எந்தவித பயனும் இல்லாத
இந்தக் கள்ளிச் செடியின் அடித்தண்டில்தான் மணம் வீசும் அகில் கட்டை
உண்டாகிறது.
2. காட்டில் சுற்றித் திரியும் மானின் வயிற்றில்தான்
ஒப்பனைக் கலைக்குப் பெரிதும்
பயன்படும் மணமிக்க அரிதாரம் ( கஸ்தூரி) தோன்றுகிறது.
3. தாகத்திற்கு உதவாத தண்ணீரைக் கொண்டது கடல். அந்த
உப்பு நிறைந்த பெருங்கடலில்தான் விலைமதிப்பற்ற முத்து கிடைக்கிறது.
இதுபோலவே, நல்ல மனிதர்கள் எந்தக் குலத்தில் பிறப்பார்கள்
என்பதை யாராலும் சொல்ல முடியாது.
சேற்றில்
மலரும் செந்தாமரை போல, எந்தக் குடியில் வேண்டுமானாலும்
நல்லவர்கள் பிறக்கலாம்.
அதனால், பிறந்த குடியை வைத்து ஒருவரை எடை போடாதீர்கள்.
அவரிடம் உள்ள சிறந்த குணத்தை வைத்து எடை போடுங்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 131. நல்ஆள் பிறக்கும் குடி ஆ.தி.பகலன் "
Post a Comment