"காலம் பொன் போன்றது "
மிகப்பெரிய உண்மையைக்கூட மிக அழகான உவமைகள் மூலம்
உணர்த்துவது நம் முன்னோர்களின் வழக்கம். காலத்தின் அருமையை எதனோடு ஒப்பிடுவது
என்று சிந்தித்து இருக்கிறார்கள். மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை மதிப்பு
குறையாத ஒரே பொருள் தங்கம் மட்டுமே. அதனால் காலத்தை தங்கத்தோடு ஒப்பிட்டு "
காலம் பொன் போன்றது " என்றார்கள். தங்கத்தை எப்படி போற்றிப் பாதுகாக்கிறோமோ
அதே போல் காலத்தையும் நாம் போற்றிப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
" வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுஉணரார்
வைகலும் வைகலை வைகும்என்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துஉணரா தார்." ( நாலடியார் - 39)
நாள்தோறும் நாளானது போய்த்திரும்பி வருவதைக்
காண்கிறோம். இதனை உணராமல் அறச் செயல்களைச் செய்யாமல் நாம் வாழுங்காலம் தொடர்ந்து
கொண்டே இருக்கும் என்று நினைத்து இன்புறுவர்.
நாளானது ஓவ்வொரு நாளும் தன் வாழ்நாளின் மேல் நின்று குறைந்துகொண்டே வருகிறது இதை
எண்ணிப் பார்த்து உணராதவர் எல்லாம், வாழ்நாளின் நிலையாமையை உணராதவர் ஆவர். இங்கு
நமக்கான காலம் மிகச் சிறிது. அந்தக் காலத்தில் அறச் செயல்களைச் செய்து
இன்புறுவோம்.
" நாம் மண்ணை விட்டு மறைந்தாலும்
மக்கள் மனதை விட்டு மறையாமல் இருக்க
நம்மிடம் உள்ளதைக் கொண்டு
நல்லதைச் செய்வோம்!
நாம் வாழும் காலம்
வசந்த காலமாகும்."
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(அலைப்பேசி - 9965414583).
0 Response to "தமிழ் அறிவோம்! 203. காலம் பொன் போன்றது ஆ.தி.பகலன்"
Post a Comment