குலதெய்வ வழிபாடும்!ஊர் பொது தெய்வ வழிபாடும்!!

Trending

Breaking News
Loading...

குலதெய்வ வழிபாடும்!ஊர் பொது தெய்வ வழிபாடும்!!

குலதெய்வ வழிபாடும்!ஊர் பொது தெய்வ வழிபாடும்!!

**********************************************
ஊர் பொது தெய்வம் ஒரு கிராமம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமத்தில் வாழும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வழிபடும் தெய்வம் ஊர் பொது தெய்வம் ஆகும். இத்தெய்வத்தை ஊர்ச்சாமி, கிராம தெய்வம் என்று அழைக்கப்படுவதும் உண்டு. 

கிராமப்புறங்களில் உள்ள எல்லா ஊர்களிலும் மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பேச்சியம்மன், பத்ரகாளியம்மன், மாசாணியம்மன், கோட்டை மாரியம்மன், முத்து மாரியம்மன், தண்டு மாரியம்மன், வனபத்ரகாளியம்மன் போன்ற பல தெய்வங்கள் ஊர் பொது தெய்வங்களாக அமைந்துள்ளன. 

மாரியம்மன், அம்மை போன்ற நோய்களிலிருந்து மக்களை காப்பவளாக கருதப்படுகிறாள். மாரி என்னும் சொல் 'மழையை' குறிப்பதாகும். அம்மன் தெய்வங்களை தவிர ஐயனார், கருப்பசாமி, கருப்பனார், கன்னிமார், அண்ணமார் சுவாமி, மதுரைவீரன், முனியப்பன் போன்ற தெய்வங்களும் ஊர் பொது தெய்வங்களாக வழிபடுவதை காணலாம். 

ஊர் பொது தெய்வ வழிபாடு : 
------------------------------------------------------------------------
பெரும்பாலான கோயில்களில் அம்மன் தெய்வங்களே பல்வேறு பெயர்களில் ஊர் பொது தெய்வமாக வழிபடப்படுகின்றன. இத்தெய்வ வழிபாட்டு முறைகளில் குறிப்பிடத்தக்கவை, குண்டம் இறங்குதல் கரகம் எடுத்தல் தீச்சட்டி எடுத்தல் முளைப்பாலிகை எடுத்தல் போன்றவையாகும். 

இவ்வழிபாட்டின் தொடக்கமாக அமையும் நோன்பு சாட்டுதல், கம்பம் போடுதல், அம்மன் அழைப்பு ஆகியவை விழாவின் தொடக்கத்தை குறிக்கும். நோன்பு சாட்டுதல் என்பது விழாவினை பறையடித்து அறிவிப்பதாகும். 

கம்பம் போடுதல் என்பது விழா தொடக்கத்தை குறிப்பதாகும். கோயில் முன் முக்கோண வடிவமுள்ள கம்பம் நடப்படுகிறது. கம்பத்தின் மீது பூவோடு வைக்கப்படுகிறது. இக்கம்பம் பெண் தெய்வத்தின் கணவனாக கருதப்படுகிறது. இக்கம்பத்தை அக்னி கம்பம், பூவோட்டுக்கம்பம் என்று அழைக்கின்றனர். இக்கம்பம் பால் மரத்தால் ஆனது. 

கம்பம் வெட்டுதல் தொடங்கி விழா முடியும் வரை ஊரிலுள்ள அனைவரும் விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்குபெறுகின்றனர்.

#சர்வம்_சிவார்ப்பணம்

➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️

0 Response to "குலதெய்வ வழிபாடும்!ஊர் பொது தெய்வ வழிபாடும்!!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel