தொடர்ச்சியான நான்காவது கூட்டம் 3 .11. 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள
முசரவாக்கம் பகுதியில், இயற்கை சூழ்ந்த இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முக்கிய பங்காற்றிய ரவி, பிரபா அவர்களின் பங்கு
அளப்பரியது. நண்பர்கள் 20க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
தன்னுடைய பள்ளிக் கால அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டனர். இதுவரை மூன்று சந்திப்புகளைச் சென்னை கடற்கரை ஓர விடுதியில் நிகழ்த்தினர்.
ஆனால் இந்த ஆண்டிற்கான சந்திப்பு இயற்கை வயல்வெளி சூழ்ந்த இடத்தில் நடைபெற
வேண்டும் என்று முடிவு எடுத்து அதன்படி அங்கே நடைபெற்றது. இச்சந்திப்பு என்று
வரும் என்று அனைத்து நண்பர்களும் காத்துக் கிடந்தனர். அதன்படியே 3.11.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விடிந்தது. முன்னாள் சனிக்கிழமை அன்று வேனில் யார் யார்
எந்தெந்த இடத்தில் (பயணத்தில்) இணைந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு புலனக்
குழுவின் வழியாக தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் சரியாக 6 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து
வேன் புறப்பட்டது. வடபழநியில் நண்பர்கள் ரமேஷ், பால மணிகண்டன், புனிதா, மீனா , குமுதா ஆகியோர் ஏறிக்கொண்டனர்.
இரண்டாவது நிறுத்தமாக கே.கே நகருக்கு வேன் சென்றது. அங்கே தயாராக நின்று கொண்டிருந்த மாலினி
மற்றும் ஹேமா அவர்களும் பயணத்தில் இணைந்தனர். ஒவ்வொரு இடத்திற்கு வேன் வரும்
போதும் தொலைபேசி வழியாகவும் கூகுள் மேப் வழியாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்ததாக காத்துக் கொண்டிருந்த மூன்றாவது நிறுத்தமாக வளசரவாக்கத்தில் நண்பர்கள் பத்மநாபன், ஜெயா, ரேகா போன்றோர் பயணத்தில்
இணைந்தனர். அடுத்ததாக நான்காவது
நிறுத்தமாக போரூர் சந்திப்பில் நண்பர் பாலமுருகன் அவர்கள் பயணித்தில் இணைந்தார் . செந்தில் அவர்கள்
குன்றத்தூரில் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார். இவரும் இப்பயணத்திற்காக
பாடுபட்டார்.
அடுத்ததாக ஐந்தாவது இடமாக மண்ணிவாக்கத்தில் நண்பர்கள் மனோ, மகேஷ், திலீப் ஆகியோர் இணைந்தனர். இறுதியாக
படப்பையில் நண்பர் அருண் அவர்கள் பயணத்தில் இணைந்தார். பயணம் அழகாக தன்னுடைய இளமைக்கால அனுபவங்களைப்
பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்தபடி சென்றது. வாலாஜாபாத்தில் உள்ள அன்னபூர்ணா
ஹோட்டலில் காலை சிற்றுண்டி முடிக்கப்பட்டது .
9. 15 மணிக்கு தொடங்கிய பயணம் சரியாக பத்து மணிக்கு நாங்கள் சென்றடைய
வேண்டிய இடமான முசரவாக்கம் பண்ணை
வீட்டிற்குச் சென்றோம் . ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. சனிக்கிழமை சென்ற ரவி மற்றும் பிரபா நாங்கள்
வருவதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து வைத்தனர். அதன்படி பிரபா வாசலில் கோலம் போட்டு
அசத்தியிருந்தார். மேலும் இருவரும்
இணைந்து அங்கங்கே செடிகளிலும் தென்னை மரங்களிலும், மா மரங்களிலும் பலூன் மற்றும் அலங்கார
பொருட்களைக் கட்டி நண்பர்களை இன்முகத்துடன் வரவேற்றனர் . அனைவரும் அமைதியாக இறங்கி
தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை ஒரு நாள்
மகிழ்வாக இருக்க வேண்டிய சூழலையும் நகரத்திலிருந்து இயற்கை சூழ்ந்த பகுதியில்
இருக்கின்ற அந்த தன்மையினையும் உணர்ந்து அனைவரும் மகிழ்ச்சியாகினர். தாங்கள் கொண்டுவந்த சிற்றுண்டிகளை Snacks உணவுப் பொருட்களை அனைவரும் பரிமாறிக் கொண்டு சாப்பிட்டனர். அதற்கு
பின்பாக ஒவ்வொரு விளையாட்டாக அனைவரும் விளையாடினர். முதலில் பம்பு செட்டுக்குச் சென்று ஆண்கள் ஒரு
இடத்திலும் வீட்டிற்கு அருகில் இருந்த நீச்சல் குளத்தில் பெண்களும் குளித்தனர். தனித்தனியாக பிரிவாக இருந்தது
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. அவ்வப்போது புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். திரும்பி வந்த பின்னர்
சிறிது நேரம் உணவுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டு மற்றொரு விளையாட்டில் தங்களது
கவனத்தைச் செலுத்தினர். அப்படியாக
மியூசிக்கில் சேர் என்ற விளையாட்டை அனைவரும் விளையாடினர். மிகவும் மகிழ்ச்சியான
விளையாட்டாக அது இருந்தது. அந்த தருணத்தில்
துன்பங்களை மறந்து பள்ளிப் பருவத்திற்குச் சென்ற அனுபவத்தை அனைவரும் பெற்றனர்.
வயது , பாலின வித்தியாசம் பாராமல் அங்கே அவர்கள் தன்னுடைய
ஒரு நாள் நிகழ்வை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
வழக்கம் போலவே குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிறகு உறி அடித்தல் நிகழ்வும் நடைபெற்றது. அதில்
ஜெயா அவர்கள் வெற்றி பெற்றார். மேலும்
ம்யூசிக்கல் சேர் விளையாட்டில் செந்தில் அவர்கள் வெற்றி பெற்றார். அனைவரும் கோகோ
விளையாட்டையும் விளையாடினர். அனைவரும்
சேர்ந்த ஒரு மிகச் சிறப்பான ஒரு விளையாட்டாக அது இருந்தது. அனைவரும் போட்டிக் கொண்டு தன்னுடைய வயதையும்
மறந்து ஓடிக்கொண்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புனிதா அவர்கள் ஒவ்வொரு விளையாட்டையும் மிகச்
சிறப்பாக நடத்திக் கொண்டே வந்தார். மதியம் உணவு பிரியாணி மற்றும் சைவ சாப்பாடு
அங்கே வேண்டியவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டன. சாப்பிட்ட பிறகு சினிமா பெயர் சார்ந்த விளையாட்டையும் அனைவரும் விளையாடினர் . கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த
விளையாட்டை அனைவரும் விளையாடினர். சினிமா பெயர் சொல்வது (செய்கையில்) இந்த
விளையாட்டு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
பிறகு வயல்வெளியில் சுற்றி பார்த்துவிட்டு அனைவரும் புகைப்படம் எடுத்துக்
கொண்டனர் .சரியாக 5 மணிக்கு
பாலமுருகன், வேல்முருகன், பிரபா, ரமேஷ் ஆகிய நண்பர்கள் காரில் புறப்பட்டு சென்னை
நோக்கி சென்றனர்.
பிறகு 6:00 மணிக்கு மற்ற நண்பர்கள்
அனைவரும் வந்த வேனிலேயே திரும்பவும்
வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகினர். போகும்
வழியில் பாட்டும் நடனம் என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே
வந்தனர். இறுதியில் அவர் நிறுத்தத்தில் இறங்கி கொண்டு தன்னுடைய இளமையும்
பள்ளிப்பருவக் காலத்தையும் சிறப்பாக பேசி பகிர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் விடைபெற்றனர். இருந்தாலும் இந்த நினைவுகள்
குறித்த பகிர்வுகள் அவர்களுக்கான புலனக் குழுவில் இன்னும் ஓடிக்கொண்டே
இருக்கிறது. பல வருடங்களாக இப்படித்தான்
பள்ளிப் பருவ நண்பர்களின் இன்பங்களும் துன்பங்களும் இந்தக் குழுவில் பரிமாறிக் கொண்டே
வருகின்றன. நேரம் இருப்பவர்கள் குழுவில்
வரும் பதிவிற்குப் பதில்
அளிப்பார்கள். மற்றவர்கள் பார்த்து
மட்டும் செல்வதுண்டு. பள்ளிப் பருவம்
என்பது மீண்டும் கிடைக்காத பருவம். அந்தப்
பருவத்தில் இருந்த நண்பர்கள் ஒன்றிணைந்து இவ்வாறு அடிக்கடி சந்திப்பது என்பது ஆகச்
சிறந்த வரம். இந்த வரத்தை இந்த நண்பர்கள்
மீண்டும் புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நண்பர் மகேஷ் அவர்கள் தன்னுடைய எண்ணங்களின் கருத்துக்களைக் கவிதைகளாக
வெளிப்படுத்தி வருகின்றார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
...நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள்...
அருண், மனோ, ஜெயா, திலீப் , மாலினி, ரேகா, புனிதா, மீனா, குமுதா, ஹேமா, பத்மநாபன், செந்தில், , மகேஷ், பாலமுருகன், பால மணிகண்டன், வேல்முருகன், ரவி, பிரபா, ரமேஷ்...
மகேஷ் கவிதை
நண்பர்கள் சந்திப்பின் நான்காம் பாகம் 03;11:24.
விடிந்து விடியாத காலைப் பொழுது
சென்னையை கண்டாலே வரமறுக்கும் மழை எங்களுக்காக கொட்டி தீர்த்துக்
கொண்டிருந்தது . ஒரு கோப்பை தேனீரோடு காத்திருந்த நண்பர்கள் ஆடி அசைந்து வந்தது
ஆரஞ்சு கலர் தேர் காஞ்சி நோக்கி புறப்பட்டோம் தேரில் வழியெங்கும் நண்பர்களின் வருகை.
அனைவரும் இணைந்த உடன் அன்னபூரணியில் சிற்றுண்டி சிறப்பாக. பயணத்தில்
நண்பர்கள் செய்த தீபாவளி தின்பண்டங்கள் பரிசாக ஒரு தோழியின் அறிமுகம் .
பசுமையான சூழல் பனித்துளி படர்ந்த புல்வெளி. மனம்
கவர்ந்த மாக்கோலம்
நாட்டு வெடியோடு நண்பனின் வரவேற்பு. இயற்கையின்
அழகை கண்டு பொறாமையுற்ற என் தோழிகள் தங்களை செயற்கையாக அழகினை
மெருகேற்றிக் கொண்டனர். எங்களின் தலைமுறைகள் தவறவிட்ட இயற்கை அழகினைக்
கண்டதும் துள்ளி குதித்த தோழர்கள் மீண்டும் ஒரு குளியல் போட்டனர். பூக்களின் இடையே
புன்னகையோடு சில புகைப்படங்கள்.
சிறு சிறுவிளையாட்டுகள்வெற்றியும் தோல்வியுமாய் சிரிப்புக்கு மட்டும் இல்லை எல்லை. சுவையான
வறுத்த மீன் சூடான கோழி பிரியாணிஅடடா ரசம்
சாப்பாடு தேன் சுவை. அங்கு இருந்தவர்களின் அன்பின் மிகுதியாய் தேனீரும்
தித்தித்தது.
இசையில் ஆயிரம் தடை இருக்கையை பிடிக்க
யாருக்கும்யாருக்கும் இல்லை தடை
பானையின் உடைப்பு தலையில் பட்டதும் அனைவரின்
துடிப்பு. குழந்தைகளாய் மாறி கோகோ விளையாட்டு.
இத்தனை அருமையான நினைவுகளை தந்த காஞ்சியை
உன்னை ரசிக்க இந்த ஒரு நாள் போதாது
விடைபெறுகிறேன்
விடுபட்ட நண்பர்களோடு உன்னை சந்திக்கிறேன் மீண்டும் சென்னையை நோக்கி
நண்பர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி அருமையாய் இந்நாள் முடிந்ததில் மனதில் மிகுந்த
மகிழ்ச்சி மீண்டும் ஐந்தாம் பாகத்தில் சந்திப்போம் என்று நம்பிக்கையோடு
விடைபெறுகிறேன்.
மனோவின் எண்ணங்கள்
நான்காவது சொர்க்கவாசலின் சாவியைத் தவற விட்டோம்
என்று நினைத்தேன். அந்தத் தவறவிட்ட சாவியை
மீட்டெடுத்த ரவியே🌹🌹 நன்றிகள் ஆயிரம்🙏🙏. மா கோலம் போட்டு வரவேற்ற ரோசாவே🌹🌹
எப்பொழுது மனக்கோலத்தில் பார்ப்போம் எங்கள் ராசாவே🌹🌹🌹
0 Response to "கோடம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 1996 - 98 ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் 4 வது சந்திப்பு ...03.11.2024"
Post a Comment