வீராபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் டிசம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெற்றது..

Trending

Breaking News
Loading...

வீராபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் டிசம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெற்றது..

வீராபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில்  டிசம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெற்றது..
வீராபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில்  டிசம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெற்றது..

டிசம்பர்-2025 மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி  இன்று 05.12.2025, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு த. சுரேஷ் அவர்களின் தலைமையில் கூட்டப் பொருண்மைகள் மற்றும் பள்ளியின் முக்கியத் தேவைகள் குறித்து நடத்தப்பட்டது.

கூட்டப் பொருள்கள்:

1. திறன் இயக்கம் (THIRAN)

a) திறன் மாணவர்களில் நவம்பர் மாத மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் "அடிப்படைக் கற்றல் விளைவில்" (Basic Learning Outcome) பாடவாரியாகத் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் முந்தைய மாத மதிப்பீட்டிலிருந்து அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

b) திறன் மாணவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தரநிலை அறிக்கை (Report Card) பேசப்பட்டது.

c) அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதில் திறன் மாணவர்களுக்கு "திறன் புத்தகக்கதை" அடிப்படையாகக் கொண்டு வினாத்தாள் வழங்கப்படும்.


2. உயர்கல்வி வழிகாட்டி

a) கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் 16,929 மாணவர்கள் இன்றைய தேதிப்படி எந்த உயர்கல்வியிலும் சேரவில்லை. அம்மாணவர்களை கண்டறிந்து ஊக்குவித்து, திறன் சார்ந்த படிப்புகளில் சேர பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உதவிடக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

b) அரசு பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறுவதது பள்ளித் தலைமையாசிரியர் திரு த. சுரேஷ் அவர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

b) குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு இவற்றின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, இவை அனைத்தும் இல்லாமல் தடுப்பதற்கு உறுதுணையாக உள்ள 1098 மற்றும் 14417 ஆகிய எண்களுக்கு உடனடித் தகவல் கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

3. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான செயல்பாடுகள்:

a) ஆட்டிசம் குழந்தைகளை கண்டறிதல்:

பெயர் சொல்லி அழைத்தால் திரும்பாமல் இருப்பது.

கண்களை பார்க்காமல் உரையாடுவது.

> ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வது.

குழந்தைகளுக்கு மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலோ அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனையிலோ அமைந்திருக்கும் மாவட்ட ஆரம்ப இடையீட்டுச் சேவை மையத்தை (DEIC) அணுகி உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உதவி பெறுவது அவசியம் என்கிற விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

4.மருத்துவ மதிப்பீட்டு முகாம்:

ஒன்றிய அளவில் நவம்பர்-2025 மற்றும் டிசம்பர்-2025 ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான (பிறப்பு முதல் 18 வயது வரை) மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்துதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

5. மணற்கேணி தூதுவர்கள்

சிறந்த முறையில் மணற்கேணி செயலி துணை கொண்டு மாணவர்கள் புதிய முறைகளை, கருத்துக்களைப் பதிவு செய்ய ஊக்குவித்தல்.

6. மகிழ்முற்றம் (All Schools)

a) மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் குறித்துப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

a) ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மன்றச் செயல்பாடுகள் பாடவேளையின் போது இலக்கிய வினாடி வினா மற்றும் சிறார் திரைப்பட மன்றச் செயல்பாடுகள் இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி முறையாக மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் வழியாக செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.

7. ஆதார் புதுப்பித்தல்:

a. ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களைப் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக அனைத்துப் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது..
இறுதியில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திரு வெ. பாலமுருகன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

0 Response to "வீராபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் டிசம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 05.12.2025 நடைபெற்றது.."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel