விவேகம் என்ற இன்னொரு
ஆரம்பம்
பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில்தான் பெரும்பாலான தமிழ்
திரைப்படங்கள் திரைக்கு வரும். ஆனால் ஒரு நாள் முன்கூட்டியே 24 ஆகஸ்ட் அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விவேகம்
சினிமாக் குறித்த என் புரிதல்கள் . அஜீத் நடிப்பில் வெளிவரும் படம் என்றாலே
ரசிகர்களுக்கு அலாதியானது. அந்தவகையில் இரண்டாண்டுகள் இடைவெளிப்பிறகு வெளிவந்துள்ள
இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹீரோவிச சினிமா என்றாலே பஞ்ச் டயலாக்கும் ,
முன்னிலைப்படுத்துகின்ற விதமும் மிகுதியாக இருக்கும். அதனை மேலும்
வெளிப்படுத்தியே இயக்குனர் சிவாவும் நகர்த்திச் சென்றுள்ளார்.
வழக்கமான பாடல்கள், அதிரடி
சண்டைக்காட்சிகள், என படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.'நண்பன் யார் என்பதை நான் முடிவு பண்றேன் , நான் யார்
என்பதை எதிரிங்கதான் முடிவு பண்றாங்க ' என்ற காட்சி திரையில்
வரும்போது ரசிகர்களின் விசில் சத்தம் காதைக் கிழிக்கின்றது.இப்படிப்பட்ட காட்சிகள்
வரும்போது ரசிகர்கள் மெய்மறந்து கைதட்டுவதை காணமுடிகின்றது. உடன் பழகுகின்ற நண்பனே
எதிரி என்று தெரியவருவதும் , அதனால் பின் நடக்கின்ற
பழிதீர்த்தலுமே கதையின் கரு. அதை இன்றைய தொழில்நுட்பம், வித்தியாசமான லோகேஷன் என படத்தை விறுவிறுப்பாக மாற்றியுள்ளார் இயக்குனர்.
சண்டைக்காட்சிகள் என்று நகரும்போது இடையில் காதல் வசனங்கள் வந்து வந்து
செல்கின்றன.அதிரடி இடையில் காதல் கலந்து வைத்திருப்பது வெளிப்படையாக தெரிகின்றது.
அணுஆயுதத்தை அழிக்கப்
போராடுபவராக அஜீத் நடித்துள்ளார். படம் முமுக்க அவருடைய நடிப்பு ஈடுபாட்டைக்
காணமுடிகின்றது. இருந்தாலும் காஜல் அகர்வாலின் நடிப்பு பாராட்டும் நடிப்பாக
உள்ளது. பல்வேறு இடங்களில் வித்தியாசமான காஜலை பார்க்க முடிகின்றது. கணவர் மீது
வைத்துள்ள காதலை பலவிடங்களில் கவிதையாக வெளிப்படுத்துவதும் அருமை. தான் கர்ப்பம்
அடைந்துள்ளச் செய்தியை கடிதத்தின் வழியாக சொன்னவிதம் இன்றைய கணினி காலத்திற்கு
புதுமையாக உள்ளது.நாதார்ஸாவாக அக்ஷராஹாசனும் அசத்தியுள்ளார்.
கருணாகரன் வழக்கம்போல தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களுக்குத்
தீணிபோட்டுள்ளார்.ஒருவித பயத்தோடே அஜீத்துடன் பயணிப்பதை பார்க்க முடிகின்றது.Cafe விஷயமாகட்டும் , வில்லனிடம்
அல்பேனிய மொழியில் பேசும்போதும் , அஜித் காபி குடித்துவிட்டு
மேசசைமீது காசு வைத்துவிட்டு வருவார் ஏன் அப்படி காசை வைக்கிறீங்க என்று
கேட்பதற்கு காபி குடித்துவிட்டு காசு கொடுக்காம போனா தப்பு என்று அஜீத்
சொல்லும்போதும், புல்லட்புருப் டிரஸை அணியும்போதும்
சிரிப்பட்டுகின்றார்.
அக்ஷராவுடன் பைக் சேசிங்களில் மீண்டும் ரசிகளுகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் அஜீத். பொதுவாக தமிழ் சினிமாவில் கத்தி , வீச்சரிவாள் என்று காண்பிப்பது வழக்கம் ஆனால் இப்படம் துப்பாக்கி ,நவீனக்கருவிகள் என அமர்க்களப்படுத்தியுள்ளது.ஹீரோவை பலவிடங்களில் வில்லன் ஓபராய் பாராட்டி பேசுவதை பார்க்க முடிகின்றது. ஒரு இடத்தில் ‘ ஒரு வழி இருந்தாலே அவன் ஆடுவான் அறுபது வழி இருந்தால் அடங்கவேமாட்டான் என்று சொல்லும்போதும் ரசிகர்களின் ஆர்பரிப்பை என்னவென்று சொல்வது. இந்தப்படத்தில் இயக்குனர் சிவா அஜீத்தை இந்தியவெளிச்சமூகத்தைத் தாண்டி நகர்த்துகின்ற விதத்தை கண்ணுற முடிகின்றது.
சீக்ரெட் சொஷைட்டி செய்கின்ற விதத்தையும் அரசியலையும் இப்படம் பேசியுள்ளது.விடுதலை என்ற பாடலிலே அஜீத் எப்படி உயிர்பிழைத்துத் தேறினார்
என்பது பிளாஷ்பேக் மூலம் காட்டப்பட்டுள்ளது. சிலவிடங்களில் அறிவுறுத்தலையும் கதாநாயகன்
கூறுகின்றார்.எண்ணிக்கை முடிவு பண்றதில்ல எண்ணம்தான் தீர்மானிக்கிறது என்று சொல்லி
எண்ணம்போல் வாழ்வு என தமிழக பாணிக்கு திரை நகர்வதையும் உணர முடிகின்றது.
காஜலை வீட்டில் காப்பாற்றும்விதம்
துப்பாக்கி முனையில் , கத்திமுனையில் என
பார்ப்பவரை பதற வைக்கின்ற காட்சி , இறுதிக்காட்சி என
மிரட்டல் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் ரயில் சண்டைக்காட்சி ,
ரயிலில் காஜல் பயணம் என மீண்டும் வீரம் படப்பாணியை பின்பற்றியுள்ளது ஏனென்றுத் தெரியவில்லை.அனிருத்தின் இசை படத்திற்கு பலமாக
உள்ளது.பாடலில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.இந்தபப்படம் முமுக்க அஜீத் என்ற
மனிதரே தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் இயக்குனர் சிவா & மற்றும் குழுவினரின் உழைப்பு வீண்போகவில்லை. ஏற்கனவே
நடித்த இன்னொரு ஆரம்பமாகவே காட்சி தருகின்றது.
மயிலம்இளமுருகு
mailamilamurugu@gmail.com
mailamilamurugu@gmail.com
0 Response to "விவேகம் திரைப்பட விமர்சனம்"
Post a Comment